என்னுடைய அரசியல் ஆசான் அன்பில் மகேஷ்! அவர் பேச்சை எப்போதும் மீறியதில்லை! மனம் திறந்த திமுக எம்.பி.!
தர்மபுரி: என்னுடைய அரசியல் ஆசான் அமைச்சர் அன்பில் மகேஷ் என்றும் அவர் பேச்சை நான் எப்போதும் மீறியதில்லை எனவும் மனம் திறந்துள்ளார் தர்மபுரி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லையென்றால் தன்னால் எம்.பி.ஆகியிருக்க முடியாது என்றும் தாம் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன் என்றால் அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தான் காரணம் எனவும் தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார் செந்தில்குமார் எம்.பி.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் செந்தில்குமார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை தேர்தலில் வீழ்த்தியதன் மூலம் தமிழகன் அரசியல் களத்தில் கவனம் ஈர்த்தார். அதுமட்டுமல்ல தனது தொகுதியில் மக்கள் நலன் சார்ந்த பல விவகாரங்களில் அதிகாரிகளுடன் சமரசமின்றி சண்டையும் செய்திருக்கிறார். குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தனது தொகுதிக்குள் நடைபெற்ற சாலை அமைப்பது உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகளை திடீர் ஆய்வு நடத்தி ஒப்பந்ததாரர், செயற் பொறியாளர் என எல்லோருக்கும் கேள்விக்கணைகளை வீசி திக்குமுக்காட வைப்பார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனது வேகத்தை குறைத்துக்கொண்ட டாக்டர் செந்தில்குமார், கடந்த தேர்தலில் தனக்கு எப்படி சீட் கிடைத்தது என்பது பற்றி இப்போது மனம் திறந்துள்ளார். தர்மபுரி தொகுதியில் தனக்காக பரிந்துரை செய்ததே அமைச்சர் அன்பில் மகேஷ் தான் என்றும் அப்போது இளைஞரணியில் தர்மபுரி மாவட்ட துணை அமைப்பாளராக தாம் இருந்ததாகவும் பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். உதயநிதி ஸ்டாலினிடம் தன்னை அறிமுகம் செய்து வைத்தவர் அமைச்சர் அன்பில் மகேஷ் தான் எனவும் கூறினார்.
தனக்கு சீட் வழங்கப்பட்ட போது தவறான ஆளுக்கு சீட் கொடுத்திருக்கீங்க, தர்மபுரியில் தோற்றுவிடுவோம் என பலரும் உதயநிதி ஸ்டாலினிடம் கூறியதாகவும் ஆனால் தர்ம்புரியில் தாம் வெற்றிபெற்று உதயநிதியின் தேர்வு என்றும் சோடை போகாது என்பதை நிரூபித்ததாகவும் கூறியுள்ளார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications