படித்தவர்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர், நம்பிக்கையுடன் உள்ளோம்- தமிழிசை
திருப்பூர்: லோக்சபாதேர்தலில் தமிழகத்தில் படித்தவர்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். எனவே பாஜக தமிழகத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது என்று பாஜக தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அவினாசி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பாரதீய ஜனதா கட்சி ஊழலுக்கு விலை போகாது. நிலையான நிலைப்பாட்டில் இருப்பவர் மோடி. தெளிவான கொள்கைகளை கொண்டவர்.
பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். படித்தவர்கள் அதிக பேர் வாக்களித்துள்ளனர்.
இந்திய மக்கள் மீது மிகவும் அக்கறை உள்ளவர் மோடி. தமிழகத்தை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்சனை, மீனவர் பிரச்சனை ஆகியவற்றுக்கு சுமூக தீர்வு காண்பார். இந்தியாவில் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தி தொழில் துறையில் முன்னேற்றம் காண நினைப்பவர் மோடி.
தமிழகத்தில் நான் 38 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளேன். தமிழகத்தில் பாரதீய ஜனதா கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நீலகிரி தொகுதியில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் மீது மக்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பு உள்ளது. அதே சமயம் மிக பெரிய எதிர்பார்ப்பை மக்கள் மோடி மேல் வைத்துள்ளனர். பாரதீய ஜனதா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications