அன்புமணி மைத்துனர் டாக்டர் விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்: இளங்கோவன் அதிரடி!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணியின் மைத்துனரும், சட்டசபை முன்னாள் உறுப்பினருமான டாக்டர் விஷ்ணு பிரசாத்தை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கி அக்கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசின் சம்பந்தி முன்னாள் காங்கிரஸ் எம்.பி கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் விஷ்ணு பிரசாத், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர். சட்டசபை முன்னாள் உறுப்பினர். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் செய்யாறு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். இவரது தாத்தா விநாயகம், தமிழகசட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவராவார்.

இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஷ்ணு பிரசாத் கட்சியில் இருந்த நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து வாரத இதழுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் மைத்துனரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத், காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கிற வகையில் கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த பேட்டியின் மூலம் தமிழக காங்கிரஸின் தேர்தல் அணுகுமுறைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறுகளை பரப்புகிற நோக்கத்தில் வெளிப்படையாக கருத்துகள் கூறியிருப்பதை கட்சி விரோத நடவடிக்கையாக கருதுகிறோம்.
எனவே, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். இவரோடு காங்கிரஸ் கட்சியினர் எவரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார் இளங்கோவன்.

-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications