தமிழகத்தில் 5.95 கோடி வாக்காளர்கள்... வரைவு வாக்காளர் பட்டியலை வெளியீடு
தமிழகத்தில் மொத்தம் 5.95 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் செய்து வருகிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபரில் வெளியிடப்படும்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். அதில் தமிழகத்தில் மொத்தம் 5.95 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

ஆண், பெண்கள் எத்தனை
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் தமிழகத்தில் மொத்தம் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 5,95,88,002 ஆகும். அவற்றுள் ஆண் வாக்காளர்கள் 2,94,84,492 எண்ணிக்கையும், பெண்கள் 3,00,98,268 எண்ணிக்கையும், 3-ஆவது பாலினத்தவர்கள் 5,242 எண்ணிக்கையும் உள்ளனர்.

சோழிங்கநல்லூரில் அதிக வாக்காளர்கள்
அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6,34,405 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுள் பெண்கள் மட்டும் 3,10, 542 பேர் உள்ளனர். குறைந்தபட்சமாக கீழ்வேளூரில் 1,68,275 வாக்காளர்கள் உள்ளனர். 130 வாக்காளர்களுடன் மதுரவாயலில் திருநங்கைகள் அதிகமாக உள்ளனர்.

சிறப்பு முகாம்களும் நடத்தப்படும்
இந்த பட்டியலில் பெயர் நீக்கம், சேர்ப்பு, இடமாற்றம், திருத்தம் போன்றவற்றை மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்படும்.

ஜனவரி மாதத்தில் புதிய பட்டியல்
வாக்காளர் பட்டியல் வரைவு வாக்காளர் பட்டியல் மூலம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள். சில மாதங்களுக்கு முன்பு நடந்த சிறப்பு பணி மூலம் இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தோம். ஜனவரி முதல் வாரத்தில் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார் அவர்.
-
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications