Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ரவிக்கு எதிராக 'கடிதோச்சி மெல்ல எறியும்' தீர்மானம்- கி.வீரமணி பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை திருக்குறளை மேற்கோள்காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் முக்கியமானதோர் தீர்மானம் முதலமைச்சர் முன் மொழிந்து ஒருமனதாக இன்று (10.4.2023) நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல், காலவரையின்றி, தக்க காரணம் இன்றி நிறுத்தி வைப்பதும், திருப்பி அனுப்பாமல் நிறுத்தி வைப்பது என்பது ரத்து செய்வதாகத்தான் பொருள் என்றும் தமிழ்நாடு ஆளுநர் புது விளக்கம் அளித்திருப்பது அரசமைப்புச் சட்ட விதிகளை திரித்துக் கூறும் திரிபுவாதம் மட்டுமல்ல; அது அரசமைப்புச் சட்ட 200 ஆவது பிரிவுக்கு முரண் ஆகும்.

Dravidar Kazhagam welcomes Tamilnadu Assembly Resolution Against Governor RN Ravi

அதுமட்டுமல்ல, 'ஆன்லைன்' சூதாட்ட தடுப்பு மசோதாவை நிறுத்தி வைத்து, தற்கொலைகள் பெருகும் நிலையில் அவரது 'ஒத்துழையாமை' என்பது அவர் எடுத்த பதவிப் பிரமாண வாசகத்தில் கூறிய உறுதிமொழிக்கு நேர் முரணாக உள்ளது! அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆவது பிரிவுபடி,

Oath or affirmation by the Governor.-Every Governor and every person discharging the functions of the Governor shall, before entering upon his office, make and subscribe in the presence of the Chief Justice of the High Court exercising jurisdiction in relation to the State, or, in his absence, the senior most Judge of that Court available, an oath or affirmation in the following form, that is to say -

swear in the name of God

"I, A. B., do solemnly affirm that I will faithfully execute the office of Governor (or discharge the functions of the Governor) of................... (name of the State) and will to the best of my ability preserve, protect and defend the Constitution and the law and that I will devote myself to the service and well-being of the people of .............. (name of the State)"

இதில் Well being of the people என்பது- ஆன்லைன் சூதாட்டம் தடுக்கப்பட்டாகவேண்டும்! காரணம், மக்கள் நலனுக்கு விரோதமாக தற்கொலைகள் பெருக, ஆளுநரின் தாமதமோ அல்லது நிறுத்தி வைப்பதோ என்பது நிராகரித்ததாகத்தான் பொருள் என்ற விதண்டாவாதத்தினைக் கண்டித்து சட்டமன்றத்தின் மாண்பையும், ஜனநாயகத்தைக் காப்பாற்றவுமான 'கடிதோச்சி மெல்ல எறியும்' தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தை வரவேற்கிறோம் - பாராட்டுகிறோம்! இனி மக்கள் மன்றத்தை எங்கும் சந்திக்கவேண்டியதே தவிர்க்க இயலாத அடுத்த கட்ட நடவடிக்கையாகும். ஆளுநர் திருந்தினால் ஜனநாயகம், மக்களாட்சி காப்பாற்றப்படக்கூடும். இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

Dravidar Kazhagam welcomes Tamilnadu Assembly Resolution Against Governor RN Ravi

'கடிதோச்சி மெல்ல எறியும்' விளக்கம் :

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர் (திருக்குறள் 562)

மு.வரதராசனார் உரை: ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.

கருணாநிதி உரை: குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+