சேலம் மரவனேரியில் சங்கரமடத்தை முற்றுகையிட முயன்ற திவிகவினர் கைது
சேலம் மரவனேரியில் உள்ள சங்கர மடத்தை முற்றுகையிட முயற்சித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் : தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தமைக்கு விஜயேந்திரர் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி சேலம் மரவனேரியில் உள்ள சங்கர மடத்தை முற்றுகையிட முயன்ற போது திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மியூசிக் அகாதெமியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய தமிழ்- சம்ஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்சாரிலால் புரோஹித், காஞ்சி இளைய மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுநர் உள்ளிட்டோர் எழுந்து நின்று மரியாதை செலுத்தியபோதும் விஜயேந்திரர் மட்டும் எழுந்திருக்காமல் உட்கார்ந்தபடியே இருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் தமிழ்த் தாயை அவமதித்துவிட்டதாக கூறியும் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழ் அமைப்புகள் காஞ்சி சங்கர மடத்தை முற்றுகையிடவுள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. மேலும் ராமேஸ்வரத்தில் உள்ள சங்கர மடத்தை தமிழ்த் தேசிய முன்னணி அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அந்த வகையில் சேலம் மரவனேரியில் உள்ள சங்கரமடத்தை முற்றுகையிட திராவிடர் விடுதலை கழகத்தினர் முயற்சித்தபோது அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications