அதிமுக, திமுக பஞ்சபூதங்களிலும் செய்த ஊழல் மதிப்பு ரூ.75 லட்சம் கோடி: ராமதாஸ் அதிரடி
வேலூர்: திராவிடக் கட்சிகள் பஞ்ச பூதங்களான நீர், நிலம், காற்று ஆகியவை மூலம் ரூ.75 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர். இந்த 2 ஊழல் கட்சிகளுக்கு மே 19ம் தேதி விடை காத்திருக்கிறது என பாமக நிரஉவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
திருப்பத்தூர் - தருமபுரி சாலை ரயில்வே மேம்பாலம் அருகே பாமக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக வேட்பாளர்கள் டி.கே.ராஜா (திருப்பத்தூர்), பொன்னுசாமி (ஜோலார்பேட்டை) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து அக்கட்சி தலைவர் ராமதாஸ் பேசினார்.

ராமதாஸ் பேசுகையில் கூறியதாவது: அரசியல் ரீதியாக அதிமுக- திமுக கட்சிகள் எதிரெதிர் அணியாக இருந்தாலும், மது விற்பனையால் கூட்டாக செயல்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தில் மது விற்பனை மூலம் ரூ.75 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்பேன் என்றும், படிப்படியாக மது விலக்குகொண்டு வரப்படும் எனக்கூறுவதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.
திராவிடக் கட்சிகள் பஞ்ச பூதங்களான நீர், நிலம், காற்று ஆகியவை மூலம் ரூ.75 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர். இந்த 2 ஊழல் கட்சிகளுக்கு மே 19ம் தேதி விடை காத்திருக்கிறது.
தமிழகத்தில் இருந்து திராவிடக் கட்சிகளை அகற்றவே, பாமக புதிய அவதாரம் எடுத்துள்ளது. எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 220 தொகுதிகளை பிடித்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். திராவிடக்கட்சிகள் 14 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றுவர் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications