For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குளிர்பானத்துக்கு “குட்பை”…பழச்சாறுக்கு “வெல்கம்”

Google Oneindia Tamil News

சென்னை: கொளுத்தும் கோடை வெய்யில் சுட்டெரிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் மக்கள் செயற்கையான குளிர்பானங்களை தேடி ஓடத்தொடங்கி உள்ளனர்.

ஆனால் பாட்டில்களில் அடைக்கப்படும் குளிர் பானங்கள் உடல்நலத்துக்கு பல கேடுகளை விளைவிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவற்றை விட பழ சாறுகளே உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் எனவும் கூறுகின்றனர்.

உடலுக்கு கெடுதல்:

உடலுக்கு கெடுதல்:

பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர் பானங்களில் கார்போஹைரேட்டுகளும், சர்க்கரையும் கலக்கப்பட்டுள்ளது. 250 மி.லி. குளிர்பானம் குடித்தால் 105 கலோரி சக்தியும், 26.5 கிராம் சர்க்கரை சத்தும் உடலுக்கு கிடைக்கிறது.

அமிர்தமாகும் பழச்சாறு:

அமிர்தமாகும் பழச்சாறு:

அதே நேரத்தில் பழச்சாறு அதாவது ‘ஜுஸ்' குடித்தால் 110 கலோரி சக்தியும், 26 கிராம் சர்க்கரை சத்தும் கிடைக்கிறது. இவை இரண்டையும் ஆராயும்போது குளிர்பானத்தில் குறைந்த அளவிலான சர்க்கரையும் உள்ளது.

சர்க்கரை கசக்கிற சக்கரை:

சர்க்கரை கசக்கிற சக்கரை:

சர்க்கரை அளவு கூடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. அதே நேரத்தில் நீரிழிவு நோய் இருப்பவர்களின் உடல்நிலை மேலும் மோசமடைகிறது.

எந்த கடையில நீ அரிசி வாங்கற:

எந்த கடையில நீ அரிசி வாங்கற:

மேலும் இதனால் உடல் பருமனும், இருதய நோய்களும் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இதைப் பற்றி கலாஸ்கோவ் பல்கலைக்கழக இருதயநோய் மற்றும் மருத்துவ அறிவியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை:

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை:

எனவே பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குளிர்பானங்களை விட பழ சாறுகளே உடல் நலத்துக்கு சிறந்தது..செயற்கையை விட்டுவிட்டு இயற்கைக்கு மாறினால் இல்லம் சிறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

English summary
Researcher says that artificial juice items are not good enough for health…human body suffered by this drinks more. So, avoid cool drinks instead of that use the natural fruit juices to drink.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X