எழுந்ததும் குடிக்கனும்... கெட்டுக் குட்டிச்சுவராகும் சென்னைவாசிகள்!
சென்னை: காலையில் எழுந்ததுமே மதுவின் முகத்தில் விழிப்பதை வழக்கமாக்கி வருகிறார்களாம் சென்னையில் பலர். காலை எழுந்ததுமே மதுவைத் தேடி ஓடும் அவர்களைப் பார்த்து குடும்பத்தினர் வேதனைப்படும் அவலம் அதிகரித்து வருகிறறது.
டாஸ்மாக் கடைதான் காலை 10 மணிக்குத்தானே திறக்கும். பிறகெப்படி இவர்களுக்கு அதற்கு முன்பாக மது கிடைக்கும் என்ற கேள்வி எழலாம். இப்படிப்பட்ட கொடூரக் குடிகாரர்களுக்காகவே இருக்கவே இருக்கிறது பிளாக் மார்க்கெட். மதுக் கடைகளுக்கு அருகில் உள்ள பார்களிலேயே பிளாக்கில், கூடுதல் விலையில் மது விற்பனை நடக்கிறது. அதைத்தான் வாங்கி வாயில் ஊற்றிக் கொள்கிறார்களாம் இந்தக் குடிகாரர்கள்.

இப்படிப்பட்ட குடிகாரர்களால் வீடுகளில் தினந்தோறும் பிரச்சினைதான். தினசரி காலையில் எழுந்ததும் குடிக்க ஓடுவது, பணம் கேட்டு சண்டை போடுவது என்று நிம்மதியிழந்த வாழ்க்கையாக மாறியுள்ளது இப்படிப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு.
பல குடிகாரர்களுக்கு குடிப்பதே முக்கியத் தொழிலாக மாறியுள்ளது. எப்போது பார்த்தாலும் குடிக்கும் அளவுக்கு அடிமையாகிப் போய்க் கிடக்கிறார்களாம். காலையில் குடிப்பது, பின்னர் மாலையில் குடிப்பது, இரவில் குடித்து விட்டு அதே போதையில் வந்து தூங்குவது என்று என்னேரமும் மது வாடையுடன் இவர்கள் அலைகிறார்கள்.
இப்போது சென்னையில் காலையில் எழுந்ததும் கட்டிங் விடும் குடிகாரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். தூங்கி எழுந்ததுமே கட்டிங் விட்டால்தான் இவர்களுக்கு அன்றைய நாள் நல்லபடியாக தொடங்குமாம்.
இவர்களுக்காகவே மது பார்களில் பிளாக்கில் மது விற்கிறார்களாம். கடையில் விற்கும் மதுவை விட கூடுதல் விலைக்கு இவர்கள் விற்று நல்ல காசு பார்க்கிறார்களாம்.
பலர் முதல் நாளே மது வாங்கி வைத்துக் கொண்டு வீட்டிலேயே எழுந்ததும் குடித்து விட்டு பிறகுதான் பல்லே விளக்கப் போகிறார்களாம்.
மதுக் கொடுமையின் கொடூர முகம் தமிழக மக்களின் வாழ்க்கையை படு வேகமாக சாம்பலாக்கி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications