சென்னையில் குடிநீர் வாரிய லாரிகள் நடத்திய ஸ்டிரைக் வாபஸ்! தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது
சென்னை: காவல்துறை கெடுபிடியை எதிர்த்து குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி ஓட்டுநர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு மதியம் 12 மணிக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நீங்கியது.
குடிநீர் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள லாரிகள் சென்னையில் குடிநீர் சப்ளை செய்து வருகின்றன. இந்த லாரிகள் மிக வேகமாக செல்வதாகவும், வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள குடிநீர் வாரிய அலுவலகம் முன்பு லாரிகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் உண்டு.

காவல்துறை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தொடங்கிய நிலையில், காவல்துறையின் இடையூறை கண்டித்து குடிநீர் லாரி ஓட்டுநர்கள் இன்று காலை 6 மணி முதல் தண்ணீர் நிரப்பாமல் போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சென்னையில் இன்று குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், கடைகளில் விற்பனையாகும் பாட்டில் தண்ணீரை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
இருப்பினும் குளிப்பது போன்ற பிற தண்ணீர் தேவைகளை நிறைவேற்றுவது எப்படி என்ற கலக்கத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இருந்தனர். இந்த நிலையில், ஓட்டுநர்களுடன் அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஓட்டுநர்கள் அறிவித்தனர்.
குடிநீர் பிடிக்கும் மையத்தின் அருகே லாரிகளை நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும் என்ற உறுதிமொழியை தொடர்ந்து இப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications