பயணிகளை மறித்த போக்குவரத்து அதிகாரி.. வேனில் ஏற்றிக் கடத்திய டிரைவர் !
நாகர்கோவில்: வேனில் பயணிகளை ஏற்றப்படுவதை தடுத்த போக்குவரத்துத் துறை அதிகாரியை வேனில் தூக்கி போட்டு கடத்திய சம்பவம் அங்கு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்ட மேற்கு பகுதியில் அரசு பஸ்சுக்கு போட்டியாக தனியார் வேன்கள் பயணிகளை போட்டி போட்டு ஏற்றி செல்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை கட்டுபடுத்த போக்குவரத்து கழக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை ஒரு வேன் பயணிகளை ஏற்றி கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த குழித்துறை பணிமனை மேலாளர் சுந்தர்சிங் வேனில் இருந்த பயணிகளை இறக்கி விட்டு அவர் அமர்ந்து கொண்டார். பின்னர் டிரைவரிடம் வேனை களியாக்காவிளை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். அவருடன் வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றொரு காரில் வேனை பின் தொடர்ந்தனர். ஆனால் அந்த வேன் களியாக்கவிளை காவல் நிலையம் செல்லாமல் வேறு வழியில் சென்றது.
இதை பார்த்து அதிர்ந்த பின்னால் வந்த பிற அதிகாரிகள் வேனை துரத்தி சென்றனர். வேன் தடம் மாறி செல்வதை அறிந்த அதிகாரி, தனது மேல் அதிகாரிகளுக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார். அப்போது வேன் நகர எல்லையை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே போனில் அதிகாரி பேசுவதை கேட்டு உஷாராகி வேனை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி தப்பி ஓடி விட்டார். அதற்குள் சம்பவ இடத்துக்கு வந்த புதுக்கடை மற்றும் களியாக்கவிளை போலீசார் கிளை மேலாளரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர். வேனை பறிமுதல் செய்தனர்.
சுந்தர்சிங் கொடுத்த புகாரின் பேரில் களியாக்கவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications