சென்னையில் இரவு, அதிகாலையில் லேசான மழை.... கிளம்பியது புழுக்கம்
சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவிலும், அதிகாலையிலும், காலையிலும் லேசான மழை பெய்தது.
இந்த மழையால் குளுமை ஏற்படுவதற்குப் பதில் லேசான புழுக்கமே கிளம்பியது.
கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் பனிப் பொழிவு குறைந்திருந்தது. இரவில் புழுக்கமும் வரத் தொடங்கியது. இதனால் வெயில் காலத்தின் தொடக்கம் தலை காட்டத் தொடங்குகிறதோ என்று மக்கள் பீதி அடைய ஆரம்பித்தனர். அதற்கேற்ப பகலிலும் நல்ல வெயில் அடித்து வந்தது.

ஆனால் நேற்று காலை முதலே வானம் மோடமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் அதிகாலைவாக்கில் லேசான மழை பெய்தது. நகரின் பல பகுதிகளிலும், தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்தது.
நகரில் சேப்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு நல்ல மழை பெய்தது.
காலையில் லேசான தூறல் காணப்பட்டது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், கொஞ்சம் பலமா பெய்தா லீவு கிடைக்குமே என்ற ஏக்கப் பெருமூச்சு விட்டனர். இருப்பினும் மழை நின்று விட்டது.
புதுவையிலும்
புதுச்சேரியில் நேற்று சாரல் மழை பெய்தது. இதனால் மக்கள் ஜாலியாக அந்த குளுமையான சூழலை அனுபவித்தனர்.
வழக்கமாக பிப்ரவரியில் மழை இருக்காது. ஆனால் இப்போது திடீரென வந்த மழையால் மக்கள் சற்றே மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications