பயிர்கள் கருகி நாசம்.. அதிர்ச்சியில் மாரடைப்பு… நாகையில் மேலும் ஒரு விவசாயி மரணம்
விவசாயம் பொய்த்துப் போனதால் விவசாயிகளின் மரணம் அதிகரித்து வருகிறது. இன்று காலை நாகை மாவட்ட விவசாயி ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
நாகை: நாகை மாவட்டத்தில் இன்று காலை ஒரு விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். பயிர்கள் கருகியதால் நாகை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 33 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த இரண்டு நாட்களில் மட்டும் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் காவிரியில் இருந்து நீர் கிடைக்காமலும், இயற்கையாக பெய்யும் வடகிழக்குப் பருவமழை சரியாக பெய்யவில்லை என்பதாலும் விவசாயிகள் தொடர்ந்து மரணம் அடைந்து வருகின்றனர். விவசாயம் பொய்த்துப் போனால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகிவிட்டது. பயிர்கள் காய்ந்த அதிர்ச்சியில் மாரடைப்பிலும் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை நாகையில் உள்ள மேலகாவலக்குடி என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். விவசாயி தம்புசாமி, இன்று காலை தான் பயிரிட்ட நிலத்திற்கு வழக்கம் போல் சென்றுள்ளார். அங்கு பயிர்கள் நீரின்றி வாடிக்கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சுருண்டு விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயம் பொய்த்துப் போனதால் நாகை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு நாட்களில் மட்டும் 11 பேர் நாகை மாவட்டத்தில் இறந்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டது, அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டது என 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications