சென்னை: குடிபோதையில் பெற்ற தாயை அடித்துக்கொன்ற மகன் கைது

போதையில் மகன் வாங்கி வைத்திருந்த மதுவை குடித்த அம்மாவை அடித்து கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீழ்பாக்கத்தை அடுத்த டி.பிசத்திரம் பகுதியில் வசித்து வரும் நீலக்கண்டன் என்பவருக்கும் அவரது தாய் கலாவதிக்கும் மது அருந்துவதில் ஏற்பட்ட பிரச்சினை கொலையில் முடிந்துள்ளது.

வீட்டில் தான் குடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த மதுபானத்தை எடுத்து குடித்த அம்மாவை அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Drunk man kills mother in Chennai

வெங்கடேசன் மனைவி கலாவதி. கணவர் இறந்துவிட்டதால், மகன் நீலகண்டனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். நீலகண்டன், பெயின்டர் வேலை செய்து வருகிறார். கலாவதிக்கும் நீலகண்டனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்.
நேற்றைய தகராறு கைகலப்பாக மாறியது. இதற்குக் காரணம் மதுபாட்டில்தான்.

தகராறு, கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த நீலகண்டன், கலாவதியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில், அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததும், உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். கலாவதியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கலாவதிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. நீலகண்டன் குடிப்பதற்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த மதுபானத்தை எடுத்து கலாவதி குடித்துள்ளார். வீட்டுக்கு வந்ததும், மதுபாட்டில் காலியாக இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த நீலகண்டன் கலாவதியைப் பிடித்து தள்ளினார்.

ஏற்கெனவே போதையில் இருந்த கலாவதி மயங்கி விழுந்தார். அவர் எழுந்திருக்காதது கண்டு ஆத்திரமடைந்த நீலகண்டன் உடனே தலைமுடியை பிடித்து இழுத்து கலாவதியின் தலையை சுவரில் மோதியுள்ளார். அப்போது, கலாவதியின் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது.

உடனே பயந்து போன நீலகண்டன் தப்பியோட முயற்சி செய்யவே அக்கம் பக்கத்தினர் நீலகண்டனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மதுகுடிப்பதில் ஏற்பட்ட தகராறு பெற்ற அம்மாவை கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+