விளையாட்டு வினையானது: பெற்றோரை மிரட்ட உடலில் தீ வைத்த 'குடி'மகன் பலி
நாமக்கல்: நாமக்கலில் பெற்றோரை மிரட்ட தனது உடலில் தீ வைத்த நபர் பரிதாபமாக பலியானார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இருக்கும் வாசலூர்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமியின் மகன் ஜெய்சங்கர்(34). விவசாய கூலித் தொழில் செய்து வந்தார். தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டவர். ஏன் இப்படி குடித்து குடித்து சீரழிகிறாய் என்று பெற்றோர் கேட்டால் நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி வந்துள்ளார். பல சமயம் மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி பெற்றோரை மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் திங்கட்கிழமையும் வழக்கம் போன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோர் அவரை கேள்வி கேட்க வழக்கம் போல மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்கப் போகிறேன் என மிரட்டியுள்ளார்.
பெற்றோரை மிரட்ட அவர் தனது உடலில் தீ வைத்தார். தீப்பிடித்தவுடன் அவர் வலியால் அலறினார். தீ மளமளவென பிடித்து எரிய அவரது பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் தீயை அணைத்து அவரை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications