சார் ஒரு கட்டிங்!... போலீஸை கடுப்படிக்கும் குடிமகன்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால் போலீஸ் பந்தோபஸ்தோடு குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளுக்குப் போய் சரக்கு வாங்கி வருகின்றனர். கோவில்கள், அரசியல்வாதிகள், பேரணிகளுக்கு பந்தோபஸ்த் போன காலம் போய் இப்போது டாஸ்மாக் கடைகளுக்கு பந்தோபஸ்த் போட வேண்டிய காலம் வந்து விட்டது.

என்னடா இந்த தமிழக காவல்துறைக்கு வந்த சோதனை என்று தலையில் அடித்துக்கொண்டாலும், டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு பாதுகாப்புக்காக நிற்கும் போலீஸாரை ‘சார்... ஒரு கட்டிங் போடலாமா?' என்று குடிமகன்கள் வம்புக்கு இழுப்பது வேறு போலீசாருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

குடிச்சா பிடிப்பீங்களா?

மது அருந்திவிட்டு போனால் பிடித்து மாமுல் வாங்கிய காலம் போய், போலீஸ் பாதுகாப்பு இருக்கும் பாரில் போய் குடித்துவிட்டு கூலாக பைக்கில் போகின்றனர் குடிமகன்கள்.இந்த குடிகாரர்களின் அலம்பல் தாங்காமல் போலீஸார் தலைகுனிந்து நிற்கிறார்கள்.

கழுவி கழுவி ஊத்துறாங்கப்பா

குடித்துவிட்டு போதையில் பேசுவதை சும்மாவே கேட்கமுடியாது. இதில் போலீஸ் பாதுகாப்பு வேற இருக்கா, மதுவிலக்கு போராட்டக்காரர்களை கழுவி கழுவி ஊற்றுகிறார்களாம். காவலுக்கு நிற்கும் பெண் போலீசாரின் பாடுதான் படுமோசமாம்.

நாத்தம் தாங்கலையேப்பா

நாள்பூராவும் சாராயக் கடை வாசலில் பணி என்பதால், குடிப்பழக்கமே இல்லாத போலீஸார் பலர் அங்கு காணும் அசிங்கங்களைப் பார்த்து, பொறுக்க முடியாமல் வாந்தி எடுக்கிறார்களாம். போகிற போக்கைப் பார்த்தால் நாமளும் குடிக்கு அடிமையாகிவிடுவோமோ என்று அஞ்சுகிறார்களாம்.

விடிவு எப்போது?

விடிவு எப்போது?

சாராயக் கடை வாசலில் பெண் போலீஸார் முன்பு குத்தாட்டம் போட்டு வெறுப்பேற்றுகிறார்களாம். இது எப்ப விடிவுகாலம் வருமோ? என்று உயர் போலீஸ் அதிகாரிகளே பேசத் தொடங்கியுள்ளார்களாம்.

முதல்வர் கவனத்திற்கு

முதல்வர் கவனத்திற்கு

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று கொடியேற்றிவிட்டு முதல்வர், தனது உரையில் மதுவிலக்கு பற்றிய சில அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கலாம். அது பூரண மதுவிலக்கா அல்லது படிப்படியாக மதுவிலக்கா என்று தெரியவில்லை.

அறிவிப்பு வெளியாகும்

அறிவிப்பு வெளியாகும்

பள்ளிகள், கோயில்கள் அருகில் உள்ள கடைகளை எடுப்பது முதல் டாஸ்மாக் கடைகளுக்கான நேரத்தைக் குறைப்பது, குடிப்பதற்கான வயது வரம்பை உயர்த்துவது என்று சில அறிவிப்புகளை முதல்வர் செய்யலாம் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+