அட மக்குப் பய மக்களே.. சினிமாக்காரர்கள் "செட்" போட்டாலும் கூட்டமா போய் கட்டிங் கேப்பீங்களா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: டாஸ்மாக் என்ற பெயரைப் பார்த்தாலே குடிமகன்களின் கைகள் நடுங்க ஆரம்பித்து விடும். காரணம் கடையை பார்த்த உடனே மச்சி ஓப்பன் தி பாட்டில் என்று மனசு கூவ ஆரம்பிப்பதால். அதற்காக சினிமா செட் டாஸ்மாக் கடையை கூட விடாமல் மொய்த்துள்ளனர் என்பதுதான் காலக் கொடுமையாக உள்ளது.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தில் நேற்று காலை ஒரு டாஸ்மாக் கடை புதிதாக திறக்கப்பட்டு இருந்தது. டாஸ்மாக் கடை என்ற பெயர் பலகையும் மாட்டப்பட்டு இருந்தது.

Drunkards throng cinema Tasmac shop

இதைப்பார்த்த குடிமகன்கள் பலர், ஆடி மாதத்தில் புது டாஸ்மாக் கடை திறந்துட்டாங்கடோய் என்று உற்சாகமடைந்தனர். பலரும் முண்டியடித்துக்கொண்டு ஓடி டாஸ்மாக் கடை முன்பு வரிசையில் நின்றனர்.

ஆள் ஆளுக்கு மதுவின் பிராண்டுகளை கூறி கேட்கவே, அங்கிருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள். இந்தாங்க பணத்தை புடிங்க சரக்க சீக்கிரம் குடுங்க என்று கேட்கவே கடையில் இருந்தவர்கள் சிரித்தனர்.

இது உண்மையான டாஸ்மாக் கடை இல்லை. சினிமாவிற்காக போடப்பட்ட டாஸ்மாக் கடை செட் என்று கூறினர். இதனையடுத்து குடிமகன்கள் பலரும் ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றனர். டாஸ்மாக்ன்னு பேரை பார்த்தா இப்படியா ஓடுவது என்று கேட்டு சிரித்தனர் ஊர் பொதுமக்கள்.

ADSP Pandiyarajan gets promotion as SP-Oneindia Tamil

திருந்தாட்டியும் பரவாயில்லை மக்களே, திறந்திருப்பது நிஜக் கடையா இல்லையான்னு உறுதிப்படுத்திய பிறகாவது போய் வரிசையில் நில்லுங்க இனிமே.!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A gang of Drunkards thronged to a cinema Tasmac shop near Erode and returned back disappointed.
Please Wait while comments are loading...