காசு,பணம் துட்டு மழை... ஆர்கே நகரில் அதகளம்.. அமைச்சர் கார் கண்ணாடி உடைப்பு!
ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிக அளவில் செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து அமைச்சர் உதயகுமாரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
Recommended Video

சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் பணப்பட்டுவாடா செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அமைச்சர் உதயகுமாரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே டிடிவி. தினகரன் ஆதரவாளர்கள் மீது கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் இன்று ஆளும் கட்சியினர் பண விநியோகம் செய்வதாக திமுக மற்றும் தினகரன் அணியினர் புகார் தெரிவித்திருந்தனர்.

புதிய 2 ஆயிரம் நோட்டுகள் அடங்கிய கட்டுக்கட்டான நோட்டுகளுடன் ரூ.13 லட்சம் வைத்திருந்த அதிமுகவை சேர்ந்த பச்சையப்பன் என்பவர் பிடிபட்டுள்ளார். இதனிடையே பண விநியோகம் செய்வதற்காக வந்ததாக குற்றம்சாட்டி ஒரு காரின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இது அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கார் என்று சொல்லப்படுகிறது.

டிஎன் 48 கே 9009 என்ற எண் கொண்ட சிவப்பு நிற இன்னோவா காரின் முன்பக்கத்தில் தமிழக அரசின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. கட்சிக் கொடி நீக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த காரைத் தான் தினகரன் தரப்பினர் தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து தினகரன் தரப்பினர் மீது கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications