குமரி மீனவர்கள் தொடர் ரயில் மறியல் போராட்டத்தால் 5 ரயில்கள் ரத்து
மீனவர்கள் போராட்டத்தால் குழித்துறை வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
Recommended Video

கன்னியாகுமரி : குழித்துறை ரயில் நிலையத்தில் மீனவர்கள் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருவதால் அந்த வழியாகப் பயணிக்கும் ஐந்து ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத்தொகை அதிகரித்து வழங்கக் கோரியும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் கோரிக்கை வைத்து மீனவர்கள் பலர் குழித்துறை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

இதனால், அந்த வழியாக செல்ல இருந்த ரயில்களின் சேவையை ரத்து செய்து தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரம் :
22627 திருச்சி - திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் இருந்து திருச்சி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது.
66304 கொச்சி - கன்னியாகுமரி பாசஞ்சர் ரயில் சேவை நெய்யாற்றங்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.
66305 கன்னியாகுமரி - கொச்சி பாசஞ்சர் ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
56304 நாகர்கோவில் - கோட்டயம் பாசஞ்சர் ரயில் எர்ணாகுளம் - திருவனந்தபுரம் பாதையில் இயக்கப்படும்.
56317 கொச்சுவேலி - நாகர்கோவில் இடையேயான பாசஞ்சர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட ரயில்களின் பயண விபரம் :
22628 திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், தற்போது பரசாலா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. இது மீண்டும் திருவனந்தபுரம் நோக்கி இயக்கப்பட உள்ளது.
16526 பெங்களூரு - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கான பயண நேரம் மாற்றியமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications