அடங்காத கூத்து- சசி பொதுச்செயலராக வலியுறுத்திய "நேதாஜி, எம்ஜிஆர், ஜெயலலிதா, கலாம், தேவர், பிரணாப்"
நேதாஜி, எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமிட்டவர்கள் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுக பொதுச்செயலராக வலியுறுத்திய கூத்து அரங்கேறியுள்ளது.
சென்னை: போயஸ் கார்டனை கூத்தாடும் இடமாக்கிவிட்டது மன்னார்குடி கோஷ்டி. நேதாஜி, எம்ஜிஆர், ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பிரணாப் முகர்ஜி என வேடமிட்டவர்கள் சசிகலாவை சந்தித்து அதிமுக பொதுச்செயலராக கோரிக்கை விடுத்ததுதான் லேட்டஸ்ட் கூத்து.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிகார மையமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது மன்னார்குடி கோஷ்டி. தமிழகம் முழுவதும் இருந்து லெட்டர்பேடு சங்கங்கள், கட்சிகளை சென்னைக்கு பேருந்துகளில் வரவழைக்கிறது மன்னார்குடி கோஷ்டி.

இந்த கும்பலும் சசிகலா எனும் சின்னம்மா நீங்கதான் அதிமுக பொதுச்செயலராக வேண்டும் என்று இருகை கூப்பி வேண்டுகோள் விடுக்கிறார். சசிகலாவோ தம்மை ஜெயலலிதா என நினைத்துக் கொண்டு கோரிக்கை மனுக்களை வாங்கி கொள்கிறார்.
ஜெயலலிதா மறைந்தது முதலே தினந்தோறும் இந்த காட்சிகளை அரங்கேற்றுகிறது மன்னார்குடி கோஷ்டி. இதில் உச்சபட்ச கூத்தாக இன்று நேதாஜி, எம்ஜிஆர், ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வேடமிட்டவர்கள் போயஸ் கார்டனுக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களோடு நாட்டின் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் ஜனாதிபதி கலாம் வேடமிட்டவர்களும் சசிகலாவை சந்தித்தார்.
இந்த மாபெரும் தலைவர்கள் சசிகலாவை பார்த்து கும்பிடு போட்டு அதிமுக பொதுச்செயலர் பதவி ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்ததுதான் காலக் கொடுமையாக இருக்கிறது. இன்னும் போயஸ் கார்டனில் என்னென்ன கூத்துகள் நடக்கப் போகிறதோ?
ஆமா அண்ணா, பெரியாரை எல்லாம் விட்டுட்டாங்கப்பா!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications