ஸ்டாலின் ராஜினாமா கண்துடைப்பு நாடகம் - அழகிரி, மகன் தயாநிதி கருத்து
சென்னை: மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி குறித்த மு.க.அழகிரியும், அவரது மகன் துரை தயாநிதியும் கருத்து தெரிவித்துள்ளனர். இருவருமே இந்த ராஜினாமா ஒரு நாடகம், கண்துடைப்பு என்று வர்ணித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் திமுக பெற்ற தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கட்சித் தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இதை ஏற்க கருணாநிதி மறுத்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து மு.க.அழகிரி ஒரு பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், நான் தேவையற்ற செய்திகளை பார்ப்பதும் இல்லை கேட்பதும் இல்லை. இவர் ராஜினாமா செய்வது போல் கடிதம் கொடுப்பார், ஆனால் ஜால்ராக்கள் சிலர் வேண்டாம் என தடுப்பார்கள். தலைவரும் ராஜினாமாவை ஏற்க முடியாது என்பார். பொறுத்திருந்து பாருங்கள், இது ஒரு நாடகம், கண்துடைப்பு என்றார் அழகிரி.
அவரது மகன் துரை தயாநிதி அழகிரி டிவிட்டரில் ஸ்டாலின் ராஜினாமா குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
ஒரு டிவிட்டில், இந்த நாடகம் திமுகவை முழுமையாக கைப்பற்றப் போடப்படும் நாடகமா என்று கேட்டுள்ளார்.
அடுத்த ட்விட்டில், தலைவர் கலைஞர் ராஜினாமாவை ஏற்கும் வரையில் யாரும் இதை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். அடுத்த ட்விட்டில், இப்போது அனைத்து மாவட்டச் செயலாளர்களும், தலைவரைப் பார்த்து ராஜினாமாவை ஏற்க வேண்டாம் என்று வற்புறுத்துவார்கள். அவரும் ஏற்பார், வழக்கம் போலவே எல்லாம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இன்னொரு டிவிட்டில் கண் துடைப்பு என்று போட்டுள்ளார் தயாநிதி அழகிரி.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications