அண்ணா அறிவாலயத்துக்கு வந்த கருணாநிதியின் கன்னத்தை செல்லமாக கிள்ளி மகிழ்ந்த துரைமுருகன்
அண்ணா அறிவாலயத்துக்கு வந்த கருணாநிதியின் கன்னத்தை திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் செல்லமாக கிள்ளி மகிழ்ந்தார்.
Recommended Video

சென்னை: அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று கருணாநிதி வருகை தந்ததால் மகிழ்ச்சியில் திளைத்த துரைமுருகன், அவரது கன்னத்தை கிள்ளினார்.
கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதி கட்சி சார்ந்த விஷயங்களில் நேரடியாக தலையிடுவது, தேர்தல் பிரசாரங்களில் பங்களிப்பது, குடும்ப மற்றும் கட்சியினரின் விழாக்களில் கலந்து கொள்வது போன்றவற்றை நிறுத்திக் கொண்டார்.
மேலும் அவருக்கு பிடித்த இடங்களான முரசொலி அலுவலகம் மற்றும் கட்சி அலுவலகத்துக்கு வருவதையும் நிறுத்திக் கொண்டதால் தொண்டர்கள் சற்று வேதனை அடைந்தனர்.

கருணாநிதி கிரிக்கெட்
அருள்நிதியின் மகனும் தனது கொள்ளுபேரனுமாகிய மகிழனுடன் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் கிரிக்கெட் விளையாடியது போன்ற வீடியோ வெளியானதை கண்ட தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

பிடித்தவர் யார் தெரியுமா?
சமீபத்தில் கருணாநிதியின் தொண்டையில் வைக்கப்பட்ட ஒரு கருவி எடுக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் பேச்சு பயிற்சி அளித்தனர். அப்போது உங்கள் பெயர் என்ன என கேட்டதற்கு மு.கருணாநிதி என்றார். உங்களுக்கு பிடித்த தலைவர் யார் என்று கேட்டபோது அண்ணா என்று பட்டென பதில் அளித்ததாக துரைமுருகன் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

அண்ணா அறிவாலயத்தில்...
அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று இரவு திடீரென அழைத்து வரப்பட்டார் கருணாநிதி. அப்போது அங்கிருந்த திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, துரைமுருகன், பொன்முடி, ஸ்டாலின், செல்வம் உள்ளிட்டோர் கருணாநிதியை வரவேற்றனர். அப்போது உற்சாகமிகுதியில் துரைமுருகன் குழந்தையின் கன்னத்தை கிள்ளுவதை போல் கருணாநிதியின் கன்னத்தை கிள்ளி மகிழ்ந்தார்.

கன்னத்தை வருடி
கருணாநிதியின் உடல் முன்னேற்றத்தால் மகிழ்ச்சி அடைந்து வரும் துரைமுருகன் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்துக்கு வந்த கருணாநிதி அங்கிருந்த பதிவேட்டில் மு. கருணாநிதி என்று கையெழுத்திட்டதை பார்த்து கருணாநிதியின் கன்னத்தை வருடி, திருஷ்டி கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications