சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து துரைமுருகன் விடுதலை
வேலூர் : திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் மீது கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இருந்து தற்போது இருவரும் விடுதலையாகியுள்ளனர்.
துரைமுருகனுக்கு சொந்தமான சென்னை மற்றும் காட்பாடி பகுதியிலுள்ள வீடுகள், கல்லூரி மற்றும் அலுவலகங்கள் என 9 இடங்களில் கடந்த 2011ம் ஆண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்து குவித்ததாக கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு வேலூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி துரைமுருகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக நேற்று வேலூர் நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தட்சிணாமூர்த்தி இந்த வழக்கில் இருந்து துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துகுவிப்பு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications