பரபரப்பான அரசியல் சூழல்! மே 20-ல் கூடும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு! துரைமுருகன் அறிவிப்பு!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் மே 20ஆம் தேதி சென்னையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கருணாநிதியின் நூற்றாண்டு விழா குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என அவர் கூறியிருக்கிறார்.
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஜூன் 3 2023 முதல் ஜூன் 3 2024 வரை தொண்டர்களின் இல்ல விழாவாக - மக்கள் விழாவாக - கொள்கை விழாவாக கொண்டாட வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை ஏற்கனவே அறிவுறுத்தியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு தொடர்பாக துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

''கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 20.5.2023 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும்.
அதுபோது உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications