திமுக "ஐஸ்கிரீம்".. தேமுதிக "செர்ரி".. விஜயகாந்த் எங்களுக்குத் தேவையில்லை... துரைமுருகன் அதிரடி!
வேலூர்: திமுக ஐஸ்கிரீம் மாதிரி. தேமுதிக அதன் மீது வைக்கப்படும் செர்ரிப் பழகம்தான். ஐஸ்கிரீமைத்தான் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். செர்ரியைத் தூக்கி எறிந்து விடுவார்கள். விஜயகாந்த்தும், தேமுதிகவும், எங்களுக்குத் தேவையில்லை என்று திமுக மூத்த தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.
பழம் கனிந்து வருகிறது. விரைவில் பாலில் விழும் என்று முன்பு தேமுதிக கூட்டணி குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். ஆனால் பழம் என்ன ஆனது, எங்கே போனது என்று தெரியவில்லை.
இந்த நிலையில் இன்னொரு பழக் கதையைக் கூறி திமுகவுக்கு தேமுதிக தேவையில்லை என்று துரைமுருகன் அட்டாக் செய்துள்ளார்.

திருப்பத்தூரில் விழா
திருப்பத்தூரில் மதிமுக நகரச் செயலாளர்ரகுநாத் தலைமையில் மதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் துரைமுருகன் கலந்து கொண்டார்.

துரைமுருகன் அதிரடிப் பேச்சு
இதில் துரைமுருகன் கலந்து கொண்டார். விழாவில் அவர் சிறப்புரையாற்றினார். அப்போது தேமுதிக தேவையே இல்லை என்று அதிரடியாக கூறினார் துரைமுருகன்.

அடேங்கப்பா இம்புட்டுப் பேரா!
துரைமுருகன் பேசுகையில், திமுகவில் இணைந்த அனைவரையும் வரவேற்கிறேன். மதிமுகவிலிருந்து இருந்து மட்டும் 400 பேர் வந்திருக்கிறீர்கள். இவ்வளவு பேர் அந்த கட்சியில் இருந்ததே பெரிய விஷயம்.

ஸ்டாலின் போட்டியிடுவதாக நினைத்துக் கொண்டு
வேலூர் மாவட்டத்தில் 2வது பெரிய நகரம் திருப்பத்தூர். இது தனி மாவட்டமாக மாற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 13 தொகுதிகளில் யார் வேட்பாளர் என்பதை பார்க்காதீர்கள். கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதாக எண்ணி செயலாற்ற வேண்டும்.

திமுக நேரடியாக போட்டியிடும்
கடந்த சட்டசபைத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதி கூட்டணிக்குப் போய் விட்டது. இந்த முறை திமுகவே போட்டியிடும். அதைப் பெற்றுத் தருவது எனது கடமை. வெல்ல வைக்க வேண்டியது உங்களது கடமை.

184 தொகுதிகளில் வெல்வோம்
1971ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என அனைவரும் கனவு கண்டனர். ஆனால் 184 தொகுதிகளில் திமுக வென்றது. அதேபோல இந்த முறையும் 184 தொகுதிகளில் திமுக வெல்லும்.

விஜயகாந்த் தேவையில்லை
விஜயகாந்த் எங்களுக்கு தேவை இல்லை. திமுக ஐஸ்கிரீம் போல. விஜயகாந்த் அதன் மீது வைக்கப்படும் செர்ரி பழத்தை போல. செர்ரியைத் தூக்கி எறிந்து விடுவார்கள். ஐஸ்கிரீமைத்தான் சாப்பிடுவார்கள் என்றார் துரைமுருகன் அதிரடியாக
ஆஹா.. இன்னும் எத்தனை எத்தனை பழக் கதைகள் வரப் போகுதோ!
-
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா?












Click it and Unblock the Notifications