கருணாநிதிக்கு மெரீனாவை ஒதுக்க ஆட்சேபனை இல்லை.. டிராபிக் ராமசாமி வக்கீலும் சம்மதம்!
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரீனா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு வசதியாக தாங்கள் தொடர்ந்திருந்த வழக்குகளை வாபஸ் பெறுவதாக வழக்கறிஞர்கள் துரைசாமி, பாமக பாலு ஆகியோர் இன்று தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் முன்பு நேரில் ஆஜராகி தெரிவித்தனர். முதலில் ஆட்சேபனை தெரிவித்த டிராபிக் ராமசாமி வக்கீல் பின்னர் தானும் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரீனா பீச்சில், அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய திமுக முடிவு செய்துள்ளது. ஆனால் அந்த இடத்தை வழங்க தமிழக அரசு மறுத்து விட்டது. இதற்கு அது கூறிய காரணம் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் துரைசாமி, பாமக வழக்கறிஞர் பாலு ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்குகள் என்பதே.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் முன்பு கொண்டு போயுள்ளது திமுக. ஹூலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு அனுமதி கோரி திமுக சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகளும் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் வீட்டில் வைத்து இன்று இரவு அவசர வழக்காக இது விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் சிஎஸ் வைத்தியநாதன் ஆஜரானார். மறுபக்கம் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர். இளங்கோ, ஆர். எஸ் பாரதி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள்.
முக்கிய அம்சமாக இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேற்கோள் காட்டிய வழக்குகளைத் தொடர்ந்த துரைசாமி, பாமக பாலு ஆகியோரும் நேரில் ஆஜரானார்கள். இவர்கள் மொத்தமாக 5 வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இதில் நான்கு வழக்குகளை துரைசாமி தொடர்ந்திருந்தார். பாலு ஒரு வழக்கு. இவர்கள் தவிர சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சார்பில் அவரது வழக்கறிஞர் மணிகண்டன் என்பவரும் ஆஜரானார்.
பாலுவும், துரைசாமியும் தங்களது வழக்குகளை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். ஆனால் கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் தரக் கூடாது என்று மணிகண்டன் முதலில் வாதிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அனைத்துத் தரப்பு வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர் இந்த சூழ்நிலையில் தங்களது தரப்பும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பவில்லை என்று டிராபிக் ராமசாமியின் வழக்கறிஞர் மணிகண்டன் தெரிவித்தார்.
தற்போது வழக்கு விசாரணை காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications