கொட்டும் மழையிலும் ரெயின் கோட் அணிந்தபடியே! மயிலாடுதுறை கோயிலில் பால் குடம் எடுத்த துர்கா ஸ்டாலின்!
மயிலாடுதுறை: திருவெண்காடு கோயிலில் கார்த்திகை மாதம் 3ஆவது ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம் கொட்டும் மழையில் ரெயின் கோட் அணிந்தபடி முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்தார்.
முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றி வருகிறார்கள். எனினும் அடுத்தவர்களின் நம்பிக்கையில் தலையிடுவதில்லை. இதற்கு சிறந்த உதாரணம் துர்கா ஸ்டாலின்.

இவருக்கு கடவுள் பக்தி அதிகம். இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருகிறார். அந்தந்த கோயிலில் நடைபெறும் திருவிழாக்களிலும் இவர் கலந்து கொள்வது வழக்கம்.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது நிறைய கோயில்களில் துர்கா பூஜை, புனஸ்காரங்களை செய்திருந்தார். அதன் பலனாகவே ஸ்டாலின் முதல்வரானார் என சொல்லப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறையில் ஒரு கோயிலில் பால்குடம் ஏந்தி சென்றுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு தேவார பாடல் பெற்ற தலமாகும். இது காசிக்கு இணையானது என சொல்லப்படுகிறது. இங்கு சிவபெருமானின் 5 முகங்களில் ஒன்றான அகோர மூர்த்தி மற்றும் நவகிரகங்களில் புதன் பகவான் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

இந்த கோயிலில் அகோர மூர்த்திக்கு மகா அபிஷேகம் ஏன் நடைபெறுகிறது என்றால், முன்பொரு காலத்தில் மருத்துவாசூரன் என்ற அசுரன் ஈசனிடம் பெற்ற சூலாயுதத்தை கொண்டு தேவர்கள், முனிவர்களை சதா சர்வகாலமும் துன்புறுத்தி வந்தான். இதனால் கோபமடைந்த நந்தி தேவர், அந்த அசுரனுடன் போர் புரிய தயாராகி சென்றார்.
அவரை மருத்துவாசூரன் 9 இடங்களில் சூலாயுதத்தால் குத்தி காயமடையச் செய்துவிட்டான். இதனால் சிவபெருமான் வெகுண்டு எழுந்தார். தனது 5 முகங்களில் ஒன்றான அகோர மூர்த்தியாக அசுரனை அழிக்க முற்பட்ட போதுதான் அவரை கண்டு அஞ்சிய மருத்துவாசூரன் , சிவனிடம் சரணடைந்தான்.

இதை போற்றும் வகையில்தான் கார்த்திகை மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆண்டுதோறும் அகோர மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அகோர மூர்த்திக்கு அபிஷேகத்திற்கு கொடுத்தனர். அந்த நேரம் பார்த்து மழை கொட்டிய நிலையிலும் துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் ரெயின்கோட் அணிந்து கொண்டு பால்குடம் ஏந்தி வந்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications