தேர்தல் முடிவுக்கு பிறகு தனது தவறை உணர்வார் விஜயகாந்த்: இளங்கோவன் அட்வைஸ்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தனது முடிவு தவறு என்பதை விஜயகாந்த் உணருவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன் கூறியதாவது:-
தேமுதிக தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக, தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ள முடிவு தவறானது. அரசியலில் மிகப் பெரிய வளர்ச்சியை அடைய வேண்டிய விஜயகாந்த், அதைப் பாழ்படுத்திக் கொண்டார். தொண்டர்களின் வாழ்க்கையையும் பாழ்படுத்தியுள்ளார்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு தனது முடிவு தவறு என்பதை விஜயகாந்த் உணருவார். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என்று விஜயகாந்துக்கு ஏற்கெனவே பல முறை அழைப்பு விடுத்துள்ளோம். திரும்பத் திரும்ப அழைப்பதால் பிரயோஜனம் எதுவும் இல்லை.
அதிமுகவை வீழ்த்துவதற்கு திமுக- காங்கிரஸ் கூட்டணியே போதுமானதாகும். முஸ்லிம் லீக் உள்ளிட்ட வேறு சில கட்சிகளுக்கும் கூட்டணிக்கு வரத் தயாராக உள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் தொடர்பாக கருணாநிதி விரைவில் அறிவிப்பார்.
தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பிரச்னை எதுவும் இருக்காது. காங்கிரஸின் சுயமரியாதைக்கும், திமுகவின் சுயமரியாதைக்கும் பாதகம் இல்லாத வகையில் தொகுதி பங்கீடு கிடைக்கும். பிரசாரத்துக்கு சோனியா -ராகுல் ஆகியோர் வர உள்ளனர். விவசாயிகள், ஏழைகள், வேலை இல்லாத இளைஞர்களை மேம்படுத்தும் வகையில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இருக்கும் என்று இளங்கோவன் தெரிவித்தார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications