ஜெயலலிதாவையே தரக்குறைவாக பேசியவர் நாஞ்சில் சம்பத்.. எச்.ராஜா குற்றச்சாட்டு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே தரக்குறைவாகப் பேசியவர் நாஞ்சில் சம்பத். இப்போது பிரதமரையும் பாஜக தலைவர்களையும் தரக்குறைவாகப் பேசி வருகிறார் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கூறியுள்ளார்.
நாகர்கோவில்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாகப் பேசியவர் நாஞ்சில் சம்பத். இப்போது பிரதமரையும் பாஜக தலைவர்களையும் தரக்குறைவாகப் பேசி வருகிறார் என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், " தினகரன் அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத், பிரதமரையும், பாஜக தலைவர்களையும் தரக்குறைவாக பேசி வருகிறார்.

இதை அவர் நிறுத்த வேண்டும். இப்படியே தொடர்ந்தால், அவர் சொந்த ஊருக்குள் கூட வர முடியாத நிலை ஏற்படும். வைகோவுடன் இருந்த போது, ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியவர் இவர்.
அ.இ.அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில், தினகரனை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என கோரியுள்ளனர்.
அரசின் மீது நம்பிக்கை இல்லை என்றால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரமுடியும். முதல்வரை மாற்றுவது என்பது, கட்சியில் எடுக்க வேண்டிய முடிவு. இதை மாநில ஆளுநரும் தெளிவுபடுத்தி உள்ளார்.
ஒரு கட்சியில், 50 சதவீத உறுப்பினர்கள் வெளியேறினால் தான், அது பிளவாக கருதப்படும். அல்லாத பட்சத்தில், கொறடா உத்தரவை மீறுபவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும். " என்று தெரிவித்தார் எச். ராஜா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications