அலறி அடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிய மக்கள்! கள்ளக்குறிச்சி அருகே திடீர் நில அதிர்வால் அச்சம்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளனர்.
பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு காரணமாக சங்கராபுரம் அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. புத்தாண்டு தினத்தன்று நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் வீட்டை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதனால் அந்த வட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆங்கில புத்தாண்டை இன்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நிலையில் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உள்ளனர்.
சங்கராபுரம், கல்வராயன் மலை சுற்று வட்டாரப் பகுதியில் ஆங்காங்கே பொதுமக்கள் நில அதிர்வு ஏற்பட்டதாக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு தினத்தன்று சங்கராபுரம் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே ஒருவிதமான அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறுகையில், "திடீரென பயங்கர சத்தம் கேட்டது. வீடே ஆடியது போல இருந்தது. மிகப்பெரிய பாறை ஒன்று வந்து பூமிக்குள் சென்றது போல சத்தம் கேட்டது" என அச்சம் விலகாமல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications