விழுப்புரம், கடலூர், பெரம்பலூரில் லேசான நிலநடுக்கம்? மக்கள் சாலைகளில் தஞ்சம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நள்ளிரவு 1.05 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று பெரம்பலுார் மாவட்டத்தில் பல இடங்களில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உடனடி விவரம் இதுவரை வெளியாகவில்லை. கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் பெரிதும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications