தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 42 வேட்பாளர்களுக்கு 3 ஆண்டுகள் தடை: ராஜேஷ் லக்கானி
சென்னை: தேர்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாத 42 வேட்பாளர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு வெளியான 30 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள், 3 ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதிக்க முடியும்.

1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8ஏ 11(ஏ) (2) மற்றும் 10ஏ ஆகிய பிரிவின் படி, தமிழகத்தில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் 42 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதித்து இருக்கிறது.
2011 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களுக்கும், 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 32 வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இவர்கள் தேர்தல் செலவுகளை முறையாக தாக்கல் செய்யாத காரணத்தால் வரும் சட்டசபை தேர்தலிலும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடைபெறும் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. 42 வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications