ஆர்கே நகரில் வெள்ளமென பாய்ந்த பணம்.. தினகரன் 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை?
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த அதிமுக (அம்மா) கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக(அம்மா) கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் அடுத்த 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிடாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிமுகவையும் ஆட்சியையும் சசிகலா கோஷ்டி கைப்பற்றிவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு தொடக்கம் முதலே உறுதியாக இருந்து வருகிறது. முதல்வர் நாற்காலியில் அமர நினைத்த சசிகலாவை உச்சநீதிமன்றம் சிறைக்கு அனுப்பி வைத்தது.
இதையடுத்து தினகரன் தலையெடுக்கத் தொடங்கினார். ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதுதான் தினகரனின் திட்டம்.

நூதன வழிகள்
இதற்காக ஆர்கே நகர் தொகுதியில் எத்தனை நூதன வழிகள் இருக்கிறதோ அத்தனையையும் கடைபிடித்து வாக்காளர்களுக்கு லஞ்சம் தந்தார் தினகரன். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் தினகரனின் தளபதியாக செயல்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

ஆர்கே நகர் தேர்தல் ரத்து
இதையடுத்து ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலையே தேர்தல் ஆணையம் ரத்து செய்வதாக அறிவித்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட 29 பக்க அறிக்கையில், எப்படியெல்லாம் பணப்பட்டுவாடா நடைபெற்றது என விவரிக்கப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம்?
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதிமுக(அம்மா) அணி வேட்பாளர் தினகரன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி ஆர்கே நகர் தொகுதியில் மட்டுமின்றி எந்த ஒரு தேர்தலிலும் டிடிவி தினகரன் 6 ஆண்டுகாலத்துக்குப் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

சசிக்கு 10 ஆண்டு தடை
ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் டிடிவி தினகரனின் சித்தி சசிகலா 10 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. தற்போது தினகரனும் 6 ஆண்டுகாலம் போட்டியிட முடியாத நிலை உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications