சமூக வலைதளங்களில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக புகார்.. தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அதிமுக அம்மா கட்சி சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர் டி.டிவி.தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் படி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக இரண்டாக பிளவுபட்டதால் ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப் பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளதால் பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி, இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்திலும், சசிகலா அணி சார்பில் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் தொப்பி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

 EC notice to ttv Dinakaran

2 அணிகளும் புதிய சின்னத்தில் போட்டியிடுவதால் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் இருதரப்பும் தீவிரமாக இருக்கின்றன. இரட்டை மின் விளக்கை ஓ.பி.எஸ். அணியினர் தவறாக பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையத்திடம் டி.டி.வி. தினகரன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இரட்டை மின் விளக்கை, இரட்டை இலை போல தவறாக சித்தரித்து வாக்காளர்களிடம் தவறாக கொண்டு செல்வதாக தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பு புகார் அளித்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்க மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதனையடுத்து மதுசூதனன் சார்பில் தேர்தல் கமிஷனிடம் இன்று விளக்க கடிதம் கொடுக்கப்பட்டது.

அதில் இரட்டை மின் விளக்கை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை. டி.டி.வி.தினகரன்தான் அ.தி.மு.க. கட்சி பெயரை தவறாக பயன்படுத்துவதாகவும் குறிப்பாக சமூக வலைதளங்களில் இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க. கட்சி பெயரையும் பயன் படுத்துவதாகவும் கூறியுள்ளனர். அதற்கான ஆதாரங்களையும் இணைத்து வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இரட்டை இலை சின்னம் பயன்படுத்துவதாகவும், அதிமுக கட்சி இணையதளத்திலும் இரட்டை இலை சின்னம் அகற்றவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வரும் 6 ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படி அந்த நோட்டீசில் கூறியுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை முடக்கி இருக்கும் போது அதை எங்கும் பயன்படுத்தக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+