ஜெயலலிதா கோலம் போடாதீங்க... பாய்ந்தோடி தடுத்து நிறுத்திய பறக்கும்படை அதிகாரிகள்!
ராசிபுரம்: நாமக்ககல் மாவட்டம் ராசிபுரத்தில் அதிமுக ஏற்பாடு செய்திருந்த கோலப் போட்டிக்கு தேர்தல் அதிகாரிகள் தடை விதித்து தடுத்து நிறுத்தி விட்டனர்.
தமிழக சட்டசபைக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்து விட்டன.

இதை அரசியல் கட்சியினர் சரியாக கடைப்பிடிக்கின்றனரா என்று தீவிரமாகக் கண்காணித்து வருகிறது தேர்தல் ஆணையம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், தொகுதியிலும் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தேர்தல் நடத்தை விதி மீறல்களைக் கண்டுபிடித்துத் தடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராசிபுரத்தில் அதிமுக சார்பில் கோலப் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதாவது அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் உருவத்தை கோலமாக வரையும் போட்டியாகும் இது.
இதற்குப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும் பறக்கும் படை அதிகாரிகள் விரைந்து வந்து, இது வாக்காளர்களை கவரும் நடவடிக்கை. இதை அனுமதிக்க முடியாது என்று கூறி கோலப் போட்டியை நடத்த தடை விதித்தனர். இதனால் கோலப் போட்டி நடைபெறவில்லை.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications