மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரின்ட் அவுட்: மத்திய சென்னையில் அறிமுகம்
சென்னை: தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் பிரிண்ட் வசதி தமிழகத்தில் முதல் முறையாக மத்திய சென்னை தொகுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, மாநகராட்சியைச் சேர்ந்த நான்கு பொறியாளர்கள் திங்கள்கிழமை மாலை தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
யாருக்கு வாக்களித்தோம் என்பதை அந்தந்த வாக்காளரே ‘பிரின்ட் அவுட்'டில் பார்த்து உறுதி செய்துகொள்ளும் புதிய வசதியை, வரும் லோக்சபா தேர்தலில் சில தொகுதிகளில் மட்டும் மத்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் இந்த புதிய வசதி மத்திய சென்னை தொகுதியில் (எண்: 4) மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த தொகுதியில் உள்ள 1153 வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.
இதன்படி, ஒரு வாக்காளர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தி ஓட்டு போட்டதும், அவர் வாக்களித்த வேட்பாளரின் சின்னம் பிரின்ட் அவுட்டில் வரும். அதை கண்ணாடி திரை வழியாகப் பார்த்து வாக்காளர் உறுதி செய்து கொள்ளலாம். பின்னர் அந்த பிரின்ட் அவுட் சீட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே பத்திரமாக பாதுகாக்கப்படும்.
இந்த புதிய முறையை கையாள்வது குறித்து முதன்மைப் பயிற்சியாளர் களுக்கு டெல்லியில் தேர்தல் ஆணையம் பயிற்சி அளிக்கவுள்ளது. அவர்கள், மத்திய சென்னை வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications