புதிய கொறடாதான் இன்னும் நியமிக்கலையே... சட்டப் பாயிண்ட்டை கெட்டியாக பிடித்த ஓபிஎஸ் அணி
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அரசு மட்டுமே பதவியேற்றுள்ளது; கொறடா இன்னமும் நியமிக்கப்படாததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியும்.
சென்னை: தமிழகத்தில் புதிய அமைச்சரவை மட்டுமே பதவியேற்றுள்ள நிலையில் புதிய கொறடா நியமிக்கப்படவில்லை; ஆகையால் பழைய அரசு கொறடா ராஜேந்திரன் உத்தரவு அதிமுக எம்.எல்.ஏக்களை கட்டுப்படுத்தாது என அதிரடியாக அறிவித்து ஆச்சரியப்பட வைத்துள்ளது ஓபிஎஸ் அணி.
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. ஆகையால் அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் சபைக்கு தவறாமல் வர வேண்டும்; அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஓபிஎஸ் அரசில் கொறடாவாக இருந்த அரியலூர் ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார்.

மாஃபா பாண்டியராஜன்
ஆனால் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன், புதிய அமைச்சரவை மட்டும்தான் தற்போது பதவியேற்றுள்ளது. இன்னமும் அரசு கொறடா நியமிக்கப்படவில்லை. ஆகையால் அரியலூர் ராஜேந்திரனின் உத்தரவு அதிமுக எம்.எல்.ஏக்களை கட்டுப்படுத்தாது; யாரும் அச்சப்படத் தேவையில்லை என அதிரடியாக சுட்டிக்காட்டினார்.

கொறடா அமைச்சரவையின் அங்கம்
இது புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது. பொதுவாக ஒரு புதிய அரசு அமையும் போது சபாநாயகர், அரசு கொறடா ஆகியோர் தேர்வு செய்யப்படுவர். இதில் அரசு கொறடா என்பவர் அமைச்சரவையின் ஒரு அங்கமாக இருக்கிறார்.

புதிய கொறடா
ஆகையால் ஒரு அமைச்சரவை பதவி விலகினால் அரசு கொறடா பதவியும் அமைச்சரவையுடனேயே காலாவதியாகிவிடும். புதிய அமைச்சரவை பதவியேற்று புதிய அரசு கொறடா நியமிக்கப்பட வேண்டும்.

நியமனம் இல்லை
தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. ஆனால் இன்னமும் அரசு கொறடா நியமிக்கப்படவில்லை. ஆகையால் அரியலூர் ராஜேந்திரன் பிறப்பித்த கொறடா உத்தரவு அதிமுக எம்.எல்.ஏக்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதுதான் விதி. இதைத்தான் சபாநாயகரிடம் நேற்று ஓபிஎஸ் அணியும் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications