ஜக்கையன் 'ரிட்டர்ன்' வெறும் ட்ரைலர்தான்... எடப்பாடி அணியின் திடீர் உற்சாகம்!
கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் தங்களது அணிக்கு வந்திருப்பதில் எடப்பாடி அணி மிகவும் உற்சாகமாக இருக்கிறதாம்.
Recommended Video

சென்னை: தினகரன் அணியில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் தங்களது முகாமுக்கு வந்ததில் எடப்பாடி தரப்பு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறதாம். இது ட்ரைலர்தான்.. மெயின் பிக்சர் இனிமேதான் என உற்சாகமாக இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.
தினகரனுக்கு எதிராக அடுத்தடுத்த திட்டங்களை அதிரடியாகச் செயல்படுத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. பொதுக்குழுவுக்கு முன்னதாக, ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபித்துவிடும் முடிவில் இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.
தினகரன் அணியை உடைப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை. ஒவ்வொரு விக்கெட்டாக விழப் போகிறது பாருங்கள் என்கின்றது எடப்பாடி தரப்பு. முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்.

எதிர்க்கட்சிகள் மும்முரம்
முதல்வருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட இந்தப் புகாரை முக்கிய ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொண்டன எதிர்க்கட்சிகள். முதல்வரை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். பெரும்பான்மையில்லாத இந்த அரசு இனியும் நீடிக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்தார்.

புதுவை ரிசார்ட்
இதையடுத்து, புதுவையில் உள்ள தனியார் ரிசாட்டில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்த எம்.எல்.ஏக்களில் பலரும் சொந்தத் தொகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். இதற்குக் காரணம், உளவுத்துறை மூலம் நடத்தப்பட்ட சில சாகசங்கள்தான் என்கின்றன அ.தி.மு.க வட்டாரங்கள்.

கல்லும் கரையும்...
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், சசிகலாவை எதிர்த்து பன்னீர்செல்வம் தியானம் இருந்தபோது, அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் செல்போன் எண்கள் பொதுமக்கள் மத்தியில் வலம் வந்தன. அந்த எண்களுக்குத் தொடர்பு கொண்டவர்கள், சசிகலாவுக்கு ஆதரவாக இருக்க வேண்டாம். ஜெயலலிதாவைக் கொன்றது அவர்கள்தான். ஓபிஎஸ் அணிக்குச் செல்லுங்கள்' என வறுத்தெடுத்தனர்.

எதுக்கு பழி?
இந்த அதிரடியைத் தாங்க முடியாத மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ சின்ராஜ், கோவை வடக்கு பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டவர்கள் ஓபிஎஸ் பக்கம் வந்தனர். அதே பாணியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் செல்போன் எண்களும் வலம் வருகின்றன. பொதுக்குழுவில் சசிகலாவை நீக்கிவிட்டால், உங்கள் எதிர்காலம் என்ன ஆகும் எனத் தெரிகிறதா? எடப்பாடியையும் ஓபிஎஸ்ஸையும்தான் மக்கள் நம்பி ஓட்டுப் போடுவார்கள். தினகரனால் ஒரு சதவீத ஓட்டுக்களை வாங்க முடியுமா? தேவையற்ற பழிச்சொல்லுக்கு ஆளாகிவிட வேண்டாம் எனப் பேச வைக்கின்றனர்.

குடும்ப உறவுகள்
கூடவே, எம்.எல்.ஏக்களின் குடும்ப உறவுகளும், எடப்பாடி அணிக்குச் செல்வதுதான் நமக்கு நல்லது என மனதைக் கரைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. இன்று ஆளுநரை தினகரன் சந்தித்த அதே நேரத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஜக்கையன், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்துவிட்டார்.

பெரும்பான்மை கிடைக்கும்
தினகரன் பக்கம் இருக்கும் ஒரு சிலரைத் தவிர, அனைவரும் எங்கள் அணிக்கு வருவார்கள். அனைவரின் ஒத்துழைப்போடும் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவோம் என்றார் உறுதியாக. எடப்பாடி பக்கம் வருவதற்காக பல வாக்குறுதிகள் எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நான்கு ஆண்டு காலமும் நம்முடைய ஆட்சி தொடர வேண்டும். என்ன வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள் என ஒற்றை வார்த்தையை வலுவாகக் கூறுகின்றனர். யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து, அதற்கேற்க வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன.

மெயின் பிக்சர் இனிதான்..
தினகரனின் செல்வாக்கை முறியடிக்கும் வகையில் பல அதிரடித் திட்டங்களைக் கையில் வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஜக்கையன் ஒரு ட்ரைலர்தான்... மெயின்பிக்சரே இனிதான்... அதனால்தான், கடந்த சில நாட்களாக வழக்கத்தைவிட அதிக உற்சாகத்தில் இருக்கிறாராம் முதல்வர் எடப்பாடியார். என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
-
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார் -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ












Click it and Unblock the Notifications