ஓபிஎஸ்ஸுக்கு சசி தரப்போகும் 'ஷாக்'!ஜெயக்குமாரை தூக்கிவிட்டு நிதி அமைச்சராகும் தங்க தமிழ்ச்செல்வன்
ஓபிஎஸ் அமர்ந்த நிதி அமைச்சர் இருக்கையில் அவரது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வனை அமரவைத்து அதிர்ச்சி வைத்தியம் தர இருக்கிறது சசிகலா கோஷ்டி.
சென்னை: போர்க்கோடி தூக்கிவரும் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தந்துவிடுமாறு சசிகலா பரிந்துரைத்திருக்கிறாராம். இதனால் அமைச்சர் ஜெயக்குமார் வசம் உள்ள நிதித்துறை பறிபோகும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு முடிவு கட்டுதைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள் அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏக்கள். ஆனால் எடப்பாடிக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடுவதை உற்சாகத்தோடு கவனித்து வருகிறார் ஓ.பி.எஸ்.

ஓபிஎஸ் கோஷ்டி
அதிருப்தி அணி எம்.எல்.ஏக்களைத் தொடர்பு கொண்டும் ஓபிஎஸ் கோஷ்டி பேசி வருகிறது. இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் திகார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்ட நாளில் இருந்து, ஆட்சியும் கட்சியும் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தவித்து வருகின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள்.

அமைச்சர் பதவி ஆசை
இதனிடையே அமைச்சர்களாக இருந்தவர்கள் பலரும் தற்போது மீண்டும் அமைச்சராக வேண்டும் என விரும்புகிறார்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அம்மா வெளியில் வந்ததும் பதவி தேடி வரும் என சசிகலாவும் சிலருக்கு உறுதி கொடுத்திருக்கிறார்.

உறுதி தந்ததால் ஆதரவு
ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா பதவிக்கு வந்தால் நாமும் அமைச்சர் ஆவோர் என கனவு கண்டு கூவத்தூரில் டேரா போட்டவர்களும் உண்டு. இப்போது சசிகலாவும் சிறைக்குச் சென்ற நிலையில் எடப்பாடி அரசாங்கத்தில் அமைச்சர் பதவி உண்டு எனவும் உறுதியளிக்கப்பட்டது.

சசிகலாவின் புகார்
ஆனால் நாட்கள் உருண்டோடினவே தவிர அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. இதனால் இனியும் பொறுத்திருக்க முடியாது என பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து இதுதான் நடக்கிறது என எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல் மற்றும் தங்க.தமிழ்ச் செல்வன் விவரித்துள்ளனர்.

யார் யாருக்கு பதவி?
இதையடுத்து அமைச்சரவையில் கட்டாயம் மாற்றம் தந்தாக வேண்டும் என நெருக்கடி கொடுத்திருக்கிறார் சசிகலா. இதனால் வேறுவழியே இல்லாமல் தென்காசி எம்.எல்.ஏ செல்வமோகன் தாஸ் பாண்டியன் அல்லது ராதாபுரம் இன்பதுரை ஆகியோரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம். அதேபோல் ஓபிஎஸ்-க்கு எதிராக சொந்த மாவட்டத்திலேயே வரிந்துகட்டிக் கொண்டு செயல்படுகிறார் மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன். ஓபிஎஸ்-ன் நிதி அமைச்சர் பதவியில் அமர்ந்தாக வேண்டும் என வேட்கையுடன் இருக்கிறார் அவர். ஓபிஎஸ்-க்கு பதிலடி தரும் வகையில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு நிதி அமைச்சர் பதவி தரப்படும் எனவும் கூறப்படுகிறத்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications