கண்ணெதிரே உள்ளடி வேலைகளில் அமைச்சர்கள்... தலையில் அடித்துக் கொள்ளும் தினகரன்

ஆர்கே நகரில் பிரசாரம் செய்வதாக போக்குக் காட்டிக் கொண்டே தமக்கு எதிராக அமைச்சர்கள் பலரும் ஜரூராக உள்ளடி வேலை பார்ப்பது கண்டு எதுவும் சொல்ல முடியாமல் விழிபிதுங்கி புலம்பி வருகிறாராம் டிடிவி தினகரன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே நகரில் தொப்பி, கண்ணாடி சகிதம் சிரித்தபடியே வாக்கு கேட்கும் டிடிவி தினகரன் கண்ணெதிரே நடக்கும் அமைச்சர்களின் ஜரூர் உள்ளடி வேலைகளால் கதிகலங்கிப் போய் புலம்பி வருகிறாராம்.

ஆர்.கே.நகரில் எப்படியும் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் டிடிவி தினகரன். இந்த தேர்வில் பாஸ் செய்துவிட்டால் எப்படியும் கால்நூற்றாண்டு கனவான முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிடலாம் என்பதுதான் தினகரனின் அஜெண்டார்.

இதேபோல் முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்து அந்த நாற்காலியில் சசிகலா அமர முயற்சித்தார். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பால் சசிகலாவின் கனவு தவிடு பொடியானது.

உள்ளுக்குள் உதறல்

உள்ளுக்குள் உதறல்

டிடிவி தினகரன் மீதும் தலைக்கு மேலே கத்தி போல வழக்குகள் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் 'எனக்கு பயமில்லையே பயமில்லையே' என்ற உதறலுடனேயே ஆர்கே நகர் தேர்தல் களத்தில் வலம் வருகிறார் டிடிவி தினகரன்.

ஜரூர் உள்ளடி வேலைகள்

ஜரூர் உள்ளடி வேலைகள்

அதேநேரத்தில் தினகரன் ஜெயித்துவிட்டால் நம்ம கதி என்ன ஆகுமோ என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி பல அமைச்சர்களும் புலம்பித் தவிக்கின்றனர். இதனால் தினகரனுக்கு வேலைபார்ப்பது போல போக்கு காட்டிக் கொண்டே ஜரூராக உள்ளடி வேலைகளிலும் பல அமைச்சர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டிக்க முடியாதே

கண்டிக்க முடியாதே

டிடிவி தினகரனின் கண்ணெதிரே இந்த உள்ளடி வேலைகள், போக்கு காட்டுதல் என கூத்துகள் அரங்கேறத்தான் செய்கின்றன. ஆனால் யாரையும் கூப்பிட்டு கண்டிக்க முடியாத கையறு நிலையில் இருக்கிறார் தினகரன்.

எஸ்கேப் ஆனால் என்ன செய்வது?

எஸ்கேப் ஆனால் என்ன செய்வது?

இன்னும் 6 எம்.எல்.ஏக்கள் அப்படியே ஓபிஎஸ் அணிக்கு ஓடிப்போனால் தம்முடைய முதல்வர் பதவி கனவும் தகர்ந்து போகும் என்பதால் யாரையும் எதுவும் சொல்ல முடியாமல் நெருங்கிய சகாக்களிடம் மட்டும் புலம்பி வருகிறாராம் தினகரன். குறிப்பாக கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள் கை கோர்த்துக் கொண்டு தினகரன் முன்னாலேயே போஸ் மட்டும் கொடுத்து நானும் தேர்தல் வேலை பார்க்கிறேன் என கலாய்ப்பது கண்டுதான் ரொம்பவே அதிர்ந்து போயுள்ளராம் டிடிவி.

கிடைக்குமா? இல்லை ஜெயிலுதானா?

கிடைக்குமா? இல்லை ஜெயிலுதானா?

அங்கிட்டு வழக்குகள் துரத்த... அங்கிட்டு எம்.எல்.ஏக்கள் ஆட்டம் காட்ட... அதோ அங்கே தூரத்தில் தெரியுதே முதல்வர் நாற்காலி... அதில் அமர்ந்துவிடுவோமோ இல்லையா சித்தி போல சிறைக்குப் போவோமா? என திக்கு தெரியாமல் விக்கித்துப் போய் நிற்கிறாராம் தினகரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+