முதல்வர்கள் கூட்டத்தில் எடப்பாடி பங்கேற்கிறார்.. ஜெ.வின் உரை தயார்...அப்பல்லோவில் அதிரடி ஆலோசனை!
சென்னை: காவிரி விவகாரத்தில் நேற்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக உடனடியாக தலைமைச் செயலாளர், அரசு தலைமை வழக்கறிஞருடன் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து நீண்ட ஆலோசனையை நடத்தி முடித்து விட்டார்.
அதை விட முக்கியமாக முதல்வர்கள் கூட்டத்தில் தான் பேச வேண்டியதை உரையாகவே அவர் சொல்ல அதை அதிகாரிகள் தயாரித்து முடித்தும் விட்டனராம். செப்டம்பர் 29ம் தேதி டெல்லியில் இரு மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. அக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் கர்நாடகத்திற்கு சரியான சூடு வைத்தது. இதையடுத்து தமிழக, கர்நாடக மாநில முதல்வர்களுடன் பேச்சு நடத்த ஏற்பாடு செய்வதாக மத்திய அரசு கூற, அதை சுப்ரீம் கோர்ட் ஏற்றது. இதையடுத்து இரு மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
3 நாட்களுக்குள் இக்கூட்டம் கூட்டப்பட வேண்டும். அனேகமாக 29ம் தேதி இந்தக் கூட்டம் கூட்டப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் வைத்தே ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்து விட்டார். தலைமைச் செயலாளர், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினார் முதல்வர். பின்னர் முதல்வர்கள் கூட்டத்தில் தான் பேச வேண்டியதை அவர் சொல்ல அதை உரையாக தயாரிக்கப்பட்டு விட்டதாம். இதையடுத்து டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பார். அவர் முதல்வரின் உரையை சமர்ப்பிப்பார்.
இக்கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications