ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பவே ஆர்.கே. நகரில் தினகரன் போட்டி: எடப்பாடி பழனிச்சாமி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
சென்னை: ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பவே ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில், சசிகலா அணி சார்பில் 'அ.தி.மு.க. அம்மா' என்ற கட்சியில் தொப்பி சின்னத்தில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார்.

ஓ.பி.எஸ். அணி சார்பில் 'அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா' என்ற கட்சியில் மின்கம்பம் சின்னத்தில் மதுசூதனன் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் மருதுகணேஷும், பா.ஜ.க சார்பில் கங்கை அமரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயமும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில், தீபாவும் போட்டியிடுகின்றனர்.
கடந்த மார்ச் 16-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில், சுயேச்சைகள் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல்செய்தனர். நேற்று முன்தினம், தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் வேட்பு மனு தாக்கல்செய்தார். கடைசி நாளான நேற்று மதுசூதனன், டி.டி.வி.தினகரன், தீபா உள்ளிட்டவர்கள் வேட்பு மனு தாக்கல்செய்தனர். வியாழக்கிழமை மாலை மூன்று மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. திமுக தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் டி.டி.வி. தினகரன் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆர்.கே. நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது ''இரட்டை இலை சின்னத்தை முடக்க யார் காரணம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பவே ஆர்.கே. நகரில் டி.டிவி. தினகரன் போட்டியிடுகிறார்'' என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications