திகாரிலிருந்து திரும்பும் தினகரன்.. டார் ஆகிக் கிடக்கும் அமைச்சர்கள்.. எடப்பாடி புரோகிராம் கேன்சல்!

திகார் சிறையில் இருந்து டிடிவி தினகரன் ஜாமீனில் வெளி வரும் நிலையில் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து வருகிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலையை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினகரனின் ரிலீஸ் அவருக்கு எதிராக கருத்து கூறி வரும் அமைச்சர்களையும் கிலியில் ஆழ்த்தியுள்ளது.

டிடிவி தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதலே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சர்வ சுதந்திரமாக கருத்து கூறி வருகின்றனர். அதே நேரத்தில் தினகரனுக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் தலைமையில் முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்களும் நடத்த அனுமதி கொடுக்கின்றனர்.

சுதந்திர பழனிச்சாமி

சுதந்திர பழனிச்சாமி

கடந்த 35 நாட்களாக அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பல நகரங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைத்தனர். எந்த கட்டுப்பாடும் இன்றி வலம் வந்தனர்.

தருமபுரி விழா

தருமபுரி விழா

தருமபுரி மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைப்பதற்கான பூமி பூஜை , ஒருங்கிணைந்த நீதிமன்றம், மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் திறப்புவிழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையாக வருகிற ஜூன் 4ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தருமபுரிக்கு வருகைதரத் திட்டமிட்டிருந்தார்.

ரத்து செய்த முதல்வர்

ரத்து செய்த முதல்வர்

டெல்லி சிறையில் இருக்கும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கு ஜூன் 1ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. தினகரனின் வருகையை அடுத்து தனது தருமபுரி நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு மற்ற நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறார்கள் ஆளுங்கட்சியினர்.

தீவிர அரசியலில் தினகரன்

தீவிர அரசியலில் தினகரன்

டிடிவி தினகரன் இனி அரசியலிலும் தீவிர கவனம் செலுத்துவாராம். ஒதுக்கிவிட்டதாக அமைச்சர்கள் சொன்னாலும் அவருக்கென்று சில ஆதரவு எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். முக்கியமாக அவரது கொள்கையை பரப்ப நாஞ்சில் சம்பத் இருக்கிறார்.

கிலியில் அமைச்சர்கள்

கிலியில் அமைச்சர்கள்

பார்க்க மாட்டோம், பேச மாட்டோம் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று கூறினாலும் தினகரனின் வருகை அமைச்சர்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருப்பதாகவே கூறப்படுகிறது. தமிழக அரசியலில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+