சசி படத்தை போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது- சூசகமாக சொன்ன முதல்வர் எடப்பாடி!
சசிகலா படத்தை போஸ்டர்களில் போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலாவின் படத்தைப் போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக தெரிவித்திருத்து அதிமுக (அம்மா) கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக(அம்மா) கட்சியின் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், சசிகலா படத்தை வைத்து ஏன் பிரசாரம் செய்யவில்லை என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்களே? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, என்ன வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அதை வைத்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம். இரட்டை இலைக்கும், இரட்டை விளக்கு மின்கம்பத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தி.மு.க. வுக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும் தோல்வி பயம் வந்துவிட்டது. நிச்சயம் டி.டி.வி.தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும் என பதிலளித்தார்.
அதாவது சசிகலா படத்தை போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது என்பதைத்தான் சூசகமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே கூறிவிட்டாரே என அதிர்ந்து போயுள்ளனர் அதிமுக (அம்மா) கட்சி தொண்டர்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications