அதெல்லாம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவே முடியாது.. விஜயபாஸ்கர் பிடிவாதம்!
தமிழக அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் விஜயபாஸ்கர் தூக்கியடிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவே முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார் விஜயபாஸ்கர். ஆனால் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
ஆர்கே நகர் தொகுதி பணப்பட்டுவாடா விவகாரத்தில் சிக்கினார் விஜயபாஸ்கர். அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ89 கோடி பணப்பட்டுவாடாவுக்கான ஆவணங்களை கைப்பற்றினர்.
அந்த ஆவணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 7 அமைச்சர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விஜயபாஸ்கரால் சிக்கல்
இதனால் முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கினர். இதை தவிர்க்க விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மத்திய அரசு பிரதிநிதிகள் எடப்பாடியிடம் வலியுறுத்தி உள்ளனர்.

விஜயபாஸ்கர் மீது அதிருப்தி
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல்வர் ஆர்கே நகர் வரை சசிகலா, தினகரன் வகையறாக்களுக்கு எல்லாமுமாக இருப்பது விஜயபாஸ்கர் என்பதால் அவர் குறி வைக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக விஜயபாஸ்கரை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்யுங்கள் என கூறியுள்ளார்.

கட்சியை காப்பாற்றியது நானே...
ஆனால் ஜெயலலிதா மறைந்தது முதலே அதிமுகவை காப்பாற்ற நான் எப்படியெல்லாம் பாடுபட்டு இருக்கிறே என்னை போய் ராஜினாமா செய்ய சொல்கிறீர்களே என எகிறியிருக்கிறார் விஜயபாஸ்கர். இதனைத் தொடர்ந்துதான் விஜயபாஸ்கர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படமாட்டார் என டிடிவி தினகரன் பேட்டி கொடுத்திருக்கிறார்.

எந்த நேரத்திலும் டிஸ்மிஸ்
அதேநேரத்தில் விஜயபாஸ்கரை நீக்காவிட்டால் ஒட்டுமொத்த அமைச்சரவைக்கே பெரிய சிக்கல் வரும் என டெல்லியில் இருந்து வார்னிங் அனுப்பப்பட்டுள்ளதாம். இதனால் விஜயபாஸ்கர் பதவிக்கு எந்த நேரத்திலும் வேட்டு வரக் கூடும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications