என் பெயரில் எந்த சொத்தும் இல்லை.. திமுக அரசு ஆடிப்போய் இருக்கிறது.. எடப்பாடி பழனிசாமி பரபர பேட்டி!
சேலம் : "என் பெயரில் எந்தச் சொத்தும் கிடையாது. நான் எந்த தொழிலும் செய்யவில்லை. விவசாயம் மட்டும்தான் செய்கிறேன். எந்தச் சொத்தையும் மறைக்கவில்லை. அரசியல்ரீதியாக என்னை எதுவும் செய்ய முடியவில்லை என்பதால் பொய்யாக வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
சேலம், ஓமலூரில் உள்ள புறநகர் அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து திமுக, தேமுதிக, பாமக, அமமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி, நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

எடப்பாடி பேட்டி : இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஓபிஎஸ், தி.மு.க-வுக்கு பி டீமாகச் செயல்படுகிறார் என்று கூறியிருந்தேன். அது நிரூபணமாகிவிட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சி.எஸ்.கே டீம் விளையாடியபோது, ஓபிஎஸ் மேட்ச் பார்க்கச் சென்றிருந்தார். போனவர் மேட்ச் மட்டும் பார்த்தால் பரவாயில்லை. அங்கு சென்று ஸ்டாலின் மருமகன் சபரீசனைச் சந்தித்திருக்கிறார். இதிலிருந்தே தெரிகிறது, ஓபிஎஸ் தி.மு.கவின் கைக்கூலி என்பது.
என்மீது ஏற்கெனவே ஆர்.எஸ்.பாரதி பொய் வழக்கு தொடர்ந்தார். டென்டரில் முறைகேடு என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையிலிருந்தபோது வழக்கை திரும்பப் பெற்றனர். இவர்கள் செய்த ஊழல்களை மறைப்பதற்காக எங்கள் மீது வழக்கு போட்டு வருகின்றனர். எந்தவித உண்மையும் இல்லை. அ.தி.மு.க ஆட்சி சிறப்பான ஆட்சி என்பதை நிரூபித்திருக்கிறோம்.
கேபினட் மாற்றம் ஏன்? : திமுக ஆட்சியின் ஊழலின் வெளிப்பாடுதான் தற்போது நடந்திருக்கும் அமைச்சரவை மாற்றம். அப்படி இல்லாவிட்டால் ஏன் அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது? ஒரே ஒரு ஆடியோவால் அரசாங்கம் ஆடிப்போய்விட்டது. ஒரு விக்கெட் போய்விட்டது, அமைச்சரவை ஆடிப்போயிருக்கிறது. திமுக ஆட்சியின் இரண்டாண்டு கால ஆட்சியில் ஊழலைத் தவிர வேற எதுவும் செய்யவில்லை. எல்லா துறைகளிலும் ஊழல்தான் நிறைந்திருக்கிறது. இதற்கு சான்றாகத்தான் நிதியமைச்சர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாக, நிதியமைச்சர் பேசிய ஆடியோதான் தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கான காரணம். இன்னும் நிறைய ஆடியோக்கள் வரும் என்று சொல்லியிருக்கின்றனர். அவ்வாறு வந்தால் நிறைய செய்திகள் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளில் திமுக செய்த சாதனை 30,000 கோடி ரூபாய் கொள்ளையடித்தது தான்.
பிடிஆர் மீது பயம் : இன்னும் அமைச்சரவையிலிருந்து பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை நீக்கியிருந்தால், இன்னும் நிறைய செய்திகள் வந்துவிடும், பணம் எங்கெங்கு இருக்கிறது என்று சொல்லிவிடுவார் என்ற பயத்தால்தான், துறையை மட்டும் மாற்றி அவரை அமைச்சரவையிலேயே வைத்திருக்கின்றனர். ஆளுநரை நாங்கள் சந்திக்கும் போது இது பற்றி விளக்கமாக தெரிவிப்போம்.
அதுமட்டுல்லாமல் ஆவினில் நிறைய முறைகேடுகள் நடந்திருக்கின்றன. அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்றிருக்கிறது. இதனால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் கூறியிருந்தோம். அதை யாரும் கண்டுகொள்ளவில்லை, அதையெல்லாம் உண்மை என்று நிரூபிக்கும் விதமாக திமுக அரசாங்கம் பால்வளத்துறை அமைச்சர் நாசரை நீக்கியிருக்கிறது." எனத் தெரிவித்தார்.
என் பெயரில் எந்த சொத்தும் இல்லை : கடந்த சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனுவில் சொத்துகளை குறைத்து காட்டியதாக புகார் எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "என் பெயரில் எந்தச் சொத்தும் கிடையாது, எந்தச் சொத்தையும் நான் என் பெயரில் வாங்கவில்லை. வருவாய் குறைவாக காட்டியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். என்ன இருக்கிறதோ அதை தான் காட்டியுள்ளேன். நான் எந்த தொழிலும் செய்யவில்லை விவசாய மட்டும் தான் செய்கிறேன். எந்த சொத்தையும் மறைக்கவில்லை.

அரசியல்ரீதியாக என்னை எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் தற்போது என்மீது புகார் தெரிவித்திருக்கும் மிலானி, தி.மு.கவைச் சேர்ந்தவர். அந்தக் கட்சியின் தூண்டுதலின்பேரில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். சட்டரீதியாகச் சந்திப்பேன். இது முழுக்க முழுக்க விதிமீறல் வழக்கு. தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்ந்தால் ஒரு வருடத்தில் தொடர வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடரப்பட்டிருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல், இந்த வழக்கு என் தொகுதியான, எடப்பாடி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆனால் சேலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே இதனை சட்டப்படி சந்திப்பேன்" எனத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications