பூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை காண முடியாது- முதல்வர் எடப்பாடி
சேலம்: பூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை காண முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கடந்த 20ம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஈழப் போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் திமுகவும் காங்கிரஸ் கட்சிகள் தான் என்றும் அவர்களை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை போரில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நடவடிக்கைகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 25-ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி நேற்று தமிழக மாவட்டங்களில் அதிமுகவின் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

ஊழல் குற்றச்சாட்டுகள்
சேலத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி பேசுகையில் அதிமுக ஆட்சியில் சட்டவிதிகளின்படி டெண்டர்கள் விடப்படுகின்றன. வேண்டுமென்றே திட்டமிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர்.

உழைப்பில் வாழ்பவர்கள் அல்ல
பூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை காண முடியாது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். அதிமுகவை உடைக்க முயன்ற ஸ்டாலினால் ஒரு தொண்டனையாவது இழுக்க முடிந்ததா? உழைக்கப் பிறந்தவர்கள் அதிமுகவினர்; மற்றவர்கள் உழைப்பில் வாழ்பவர்கள் அல்ல.

திமுக ஒரு கம்பெனி
உழைப்பால் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவியில் இருக்கிறேன். அதிமுகவில் கட்சிக்காக யார் உழைத்தாலும் உயர் பதவிக்கு வர முடியும். எப்போதும் முதல்வர் கனவில் உள்ளவர் ஸ்டாலின்; அவர் எப்போதும் கனவு மட்டுமே காண முடியும் . திமுக கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி.

உண்ணாவிரத நாடகம்
அதிமுக ஜனநாயக கட்சி. அதிமுகவில் கட்சிக்காக யார் உழைத்தாலும் உயர் பதவிக்கு வர முடியும். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார்.

போர்க் குற்றவாளி
இலங்கையில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் துயரங்களை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். திமுக, காங்கிரஸை போர்க்குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்று பேசினார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications