பிடிஆர் ஆடியோ விவகாரம்: அதெல்லாம் லேசில் விட மாட்டோம்.. டெல்லிக்கு போவோம்.. சீறிய எடப்பாடி பழனிசாமி
மதுரை: ஆடியோவில் இருக்கும் குரல் நிதியமைச்சரின் குரல்தான் என்றும் மத்திய அரசு விசாரணைக்கு வலியுறுத்துவோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த சில நாட்களாக ஒரு ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மேலும் அந்த ஆடியோ உரையாடலுக்கு தமிழ் மொழிப்பெயர்ப்பையும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தார்.

அண்ணாமலை: இதுகுறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில் இந்த ஆடியோ விவகாரத்தில் திமுக அரசு எந்த விளக்கத்தையும் அளிக்காமல் மவுனமாக இருப்பது ஓட்டு போட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த 26 வினாடிகள் ஒலிபரப்பப்பட்ட அந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்தார். மேலும் ஜோடிக்கப்பட்ட ஆடியோ என்பதற்கான ஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ குறித்து கேட்கப்பட்டது. அப்போது நிதியமைச்சர் பேசியதாக சொல்லப்படும் ஆடியோ பதிவை செய்தியாளர்களுக்கு ஐபேட் மூலம் எடப்பாடி பழனிசாமி போட்டு காட்டினார்.
அமைச்சரே கூறிவிட்டார்: பிறகு எடப்பாடி பழனிசாமி கூறுகையில் அமைச்சரே பேசிவிட்டு புனையப்பட்டது என அவரே எப்படி சொல்ல முடியும். எனவே இதை ஆய்வுக்குள்படுத்த வேண்டும். ரூ 30 ஆயிரம் கோடி என்பது சாதாரண விஷயமல்ல. 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டது என நிதியமைச்சரே வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத்தான் நாங்கள் கருதுகிறோம். இந்த வீடியோ வெளியான போது நாங்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அறிக்கை: ஆனால் நிதியமைச்சர் மறுப்பு அறிக்கை வெளியிட்ட பிறகுதான் இதில் ஏதோ இருக்கிறது என தோன்றுகிறது. இது நிச்சயமாக அவருடைய குரலேதான். ரூ 30 ஆயிரம் கோடி பணத்தை என்ன செய்வது, எங்கு வைப்பது என தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். எனவே இதை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவோம். ஆளுநரிடமும் இந்த விஷயத்தை கொண்டு செல்வோம். ஒரு நிதியமைச்சர் பேசியிருக்கிறார், அது போலியானதா, உண்மையானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
முதல்வர் அறிக்கை எங்கே: எதற்கெல்லாமோ முதல்வர் அறிக்கை விடுகிறார். இதற்கு விட வேண்டியதுதானே. அந்த ஆடியோ கிளிப்பிங் போலி என சொல்ல வேண்டியதுதானே. அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளே இல்லாத போது எங்கள் ஆட்சியில் எத்தனை குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அவர்களிடம் ஆதாரமே இல்லாமல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். 2 ஆண்டுகளாக தேர்வு செய்யப்பட்ட திமுக அரசு மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாமல் கொள்ளையடிப்பதைத்தான் குறிக்கோளாக கொண்டிருக்கிறது. 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர் என்றால் அதை நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications