என்னன்னு விசாரியுங்க.. பேரணியில் குதித்த எடப்பாடி பழனிசாமி.. ஆளுநர் ரவியுடன் அவசர மீட்டிங்.. ஏன்?
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவியை இன்று சந்தித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மதுபான - கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இதற்காக அதிமுகவினர் இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.

ஏற்கனவே செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பலியான நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் கள்ளச்சாராயம் உச்சத்தில் இருந்தது. 90 களில் உச்சத்தில் இருந்த பிஸ்னஸ் ஆகும் இது. அதன்பின் அரசு தீவிரமாக செயல்பட்டு இதை முடக்கியது.
அப்போது கண்கள் போன பரிதாபமும், உயிர்கள் போன கொடூரமும் அரங்கேறியது. அதன்பின் டாஸ்மாக் வந்ததும் கள்ள சாராயத்திற்கான தேவை குறைந்தது. படிப்படியாக கள்ளச்சாராயம் அதிகம் ஆனது.

இது போக தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் மது அருந்திய இரண்டு பேர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அருந்திய மதுவில் சையனைடு கலந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கொலையாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஆளுநர் ஆர். என் ரவியை இன்று சந்தித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மதுபான - கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இதற்காக அதிமுகவினர் இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பேரணி காரணமாக சென்னையில் அண்ணா சாலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடும் வெயிலில் 12க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர்.
கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி, வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில், உரிய நேரத்திற்கு முன்பாக சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானம் அருந்திய திரு குப்புசாமி , திரு விவேக் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளார்கள்,அவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும்,வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி? என்பதனை இந்த அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
முறையற்ற மது விற்பனையால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே அரசே ஏற்று மதுவிற்பனையை நடத்தி வருகிறது, அப்படி இருக்கையில் சமீபகாலமாக அரசு மதுபான விற்பனையில் பல்வேறு திட்டமிட்ட முறைகேடுகள் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருவதையும் அதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதையும் நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.
நான் பலமுறை இத்துறையில் நடந்துவரும் முறைகேடுகளை எடுத்துரைத்தும் வழக்கம்போல் இந்த அரசு மக்களின் உயிர் காக்க அக்கறையின்றி மெத்தனம் காட்டி வருகிறது.ஆகவே தஞ்சாவூர், செங்கல்ப்பட்டு மற்றும் விழுப்புரத்தில் நடைபெற்ற போலி மதுபான-கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கும் உரிய நீதி வேண்டியும், இதனை உரிய விசாரணைக்கு உடனே உட்படுத்த வேண்டியும் மாண்புமிகு ஆளுநரிடம் நாளை மனு அளிக்க உள்ளோம்., என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக தமிழ்நாட்டில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் குறித்து ஆளுநர் ஆர். என் ரவி தலைமை செயலாளர் இறையன்புவிடம் அறிக்கை கேட்டு இருந்தார். இந்த மரணங்கள் நடந்தது எப்படி? இதில் இத்தனை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது ஏன்? என்றெல்லாம் ஆளுநர் ஆர். என் ரவி விளக்கம் கேட்டு இருந்தார்.
இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவியை இன்று சந்திக்கிறார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications