ஆர்.கே.நகரில் ஜெ.வை காங். ஆதரிக்க வலியுறுத்திய ப.சி. ஆதரவாளர் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்!!
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும் என்று பேசியதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் கோவை கே.செல்வராஜ் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பொறுப்பேற்றது முதல் அவரைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார் கோவை செல்வராஜ். மேலும், தமிழகத்தில் இளங்கோவன் தலைமையில் இருப்பது கருணாநிதி காங்கிரஸ் என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

இதற்கு இளங்கோவன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் செல்வராஜ் பேச்சை ஆதாரத்துடன் டெல்லி மேலிடத்துக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஆர்.கே. நகரில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் முதல்வர் ஜெயலலிதாவை காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என்று செல்வராஜ் பேசி வந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு தீர்மானத்துக்கும் விரோதமாகச் செயல்பட்டு வரும் கோவை கே.செல்வராஜ் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார். அவரோடு காங்கிரஸ் கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபை முன்னாள் உறுப்பினரான செல்வராஜ் காங்கிரஸ் கட்சியின் மாநில சேவாதளத் தலைவராக இருந்து வந்தார். ஆனால் காங்கிரஸில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இல்லை என கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications